ETV Bharat / state

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.107 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் நாசர் - தமிழ்நாடு அரசின் நகை கடன் தள்ளுபடி திட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 193 நபர்களுக்கு 107 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

திருவள்ளூர்
திருவள்ளூர்
author img

By

Published : Mar 27, 2022, 10:49 PM IST

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக அரசு அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 183 நபர்களுக்கு 107 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (மார்ச் 27) கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்ற 258 பயனாளிகளுக்கு 98 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருப்பி கொடுத்து அதற்கான ரசீதை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: நீட் இப்படித் தான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறதா?-பாமக நிறுவனர் ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.