திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரும் இவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களது நான்கு வயது சிறுமியை பெர்னாண்டஸ் என்பவர் தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு நீண்டகாலமாக நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜனலட்சுமி ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து, சிறுமியை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக பெர்னாண்டஸ்க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பரணிதரன் தீர்ப்பளித்தார். இதையடுத்து, காவல்துறையினரின் பாதுகாப்புடன் பெர்னாண்டஸ் சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.