திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் உதவியாளராக பணிபுரியும் சுபா, சுய உதவிக் குழுக்களுக்கு கடன்கள் பெற்றுத்தரும் பிரிவில் உள்ளார். இதில், சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் சுய உதவிக் குழு கடன் வழங்கியுள்ளார்.
அண்மையில், நெல்லை அதிமுக மாவட்ட பொருளாளர் மற்றும் கூட்டுறவு சொசைட்டியின் தலைவருமான சண்முகசுந்தரம் சுய உதவி குழுக்களுக்கு கடன் கேட்டு உதவியாளர் சுபாவை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சுய உதவிக் குழுக்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அவரது செயலைக் கண்டித்து தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும், இதுகுறித்து உதவியாளர் அருணாச்சலத்திடம் புகார் மனுவும் அளித்தனர்.
சுபா என்பவரை தரக்குறைவாக பேசிய அதிமுக நிர்வாகி சண்முகசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.