தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஊரடங்கு நாள்களில் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி, "அத்தியாவசிய பொருள்களை விற்கும் கடைக்காரர்கள் தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். இல்லையென்றால் அதற்கு முழுப்பொறுப்பு கடைக்காரர் எடுத்துகொள்ளப்பட்டு கடைகளை மூட உத்தரவிடப்படும்.
மேலும் கடைகளில் பணிபுரிபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும் பொதுமக்களும் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் ரூ. 100 அபராதமும் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு காவல் துறை மூலம் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்