ETV Bharat / state

எந்த நதியில் எவ்வளவு வெள்ளம்? - 3 மாவட்டங்களுக்கான அப்டேட் - கோடையாறு

Tamilnadu Rivers Water flow Status: தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், அந்த மாவட்டங்களில் உள்ள ஆறுகளின் நீரோட்டம் அதிகரித்து வருவதைக் குறித்து மத்திய நீர்வளத்துறை X தளத்தில் தெரிவித்துள்ளது.

தென் மாவட்ட நதிகளில் அபாய நிலையைக் கட்ந்து ஓடும் வெள்ள நீர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 3:54 PM IST

திருநெல்வேலி: தமிழகத்தின் தெற்கே உருவாகிய கீழடுக்கு சுழற்றியால் தென் மாவட்டங்களின் அநேக இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

இதனால், அம்மாவட்டங்களில் உள்ள ஆறுகள், அணைகள், குளம் போன்ற நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும், அம்மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் நீரோட்டம் தொடர்ந்து அதிகரித்து, ஆபாத்தான நிலையைக் கடந்து செல்கிறது. இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை ஆணையம், அதி கனமழை பெய்யும் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீரோட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதை, வரைபடம் மூலம் விளக்கி பதிவிட்டுள்ளது.

தாமிரபணி: தூத்துக்குடி மாவட்டம் முரப்பநாடு பகுதியில் தாமிரபரணில் வெள்ளநீர் வரத்து 21.35மீ அளவில் இருந்த நிலையில், தற்போது 2.02 மீ அளவில் உயர்ந்து, அபாய நிலையையும் தாண்டி 23.375 மீ-ஆக நீர் வரத்து அதிகரித்து, வெள்ளமாக கரைபுரண்டு செல்கிறது.

அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை பகுதியில், தாமிரபரணி ஆற்றின் நீரோட்டம் அதன் ஆபத்தான நிலையான 5.4 மீ அளவில் இருந்த நிலையில், தற்போது, 1.90 மீ அளவில் உயர்ந்து, அபாய நிலையை விட 3.5 மீ உயர்ந்து வெள்ளமாக கரைபுரண்டு பாய்ந்து வருகிறது.

மேலும், நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியில், 77.43 மீ அளவில் அதன் ஆபத்தான நிலையைக் கடந்து வெள்ளமாக கரைபுரண்டு பாய்ந்து கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றின் நீரோட்டம், 3.03 மீ அளவிற்குத் தொடர்ந்து உயர்ந்து பெரு வெள்ளமாக மாறும் நிலைக்குச் செல்கிறது.

பாலாறு: கன்னியாகுமரி மாவட்டம், ஆஷ்ரமம் என்னும் பகுதியில், பாலாறு ஆற்றின் நீரோட்டம், அதன் அபாய நிலையான 6 மீ அளவை, 0.03 மீ அளவிற்கு தொடர்ந்து உயர்ந்து, அதன் ஆபத்தான நிலையைக் கடந்து 1.07மீ உயர்ந்து வெள்ளமாகச் செல்கிறது.

கோடையாறு: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அடுத்த திருவரம்பு பகுதியில் ஓடும் கோடையாற்றின் நீரோட்டம், 13.05,மீ அளவில் எச்சரிக்கத்தக்க நிலையில் சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது அதன் நீரோட்டம் 1.05,மீ அளவிற்கு நிதானமாக உயர்ந்து, தற்போது 12 மீ அளவில் அதன் ஆபத்தான நிலையைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

பரலயாறு: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியில் ஓடும் பரலையாறு, ஏற்கனவே 10.75மீ அளவில், அதன் ஆபத்தான நிலையைக் கடந்து சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது 1.15மீ அளவில் குறைந்து, ஆபத்தான நிலையிலேயே தொடர்ந்து பாய்ந்து கொண்டிருக்கிறது.

வைப்பாறு: விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருகே ஓடும் வைப்பாறு ஆற்றின் நீரோட்டம் 50.5மீ அளவில், ஆபத்தான நிலையில் ஓடிக் கொண்டிருந்தது. தற்போது இந்த ஆற்றின் நீரோட்டம் தொடர்ந்து 0.55மீ அளவிற்கு உயர்ந்து அபாய நிலையையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: South TN Rain Live Update:எந்தெந்த பகுதிக்கு 'ரெட் அலர்ட்'..தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை..நிலவரம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.