ETV Bharat / state

கரோனா காலத்திற்கு பின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது - தமிழ்நாடு மகளிர் ஆணையம் - தமிழ்நாடு மகளிர் ஆணையம்

கரோனா காலத்திற்கு பின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவு குறைந்திருப்பதாக நெல்லையில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி தெரிவித்துள்ளார்

கரோனா காலத்திற்கு பின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது - தமிழ்நாடு மகளிர் ஆணையம்

author img

By

Published : Aug 23, 2022, 9:01 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து கேட்டிறிந்தார்.

கரோனா காலத்திற்கு பின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது - தமிழ்நாடு மகளிர் ஆணையம்

மேலும், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சகி ஒருங்கிணைப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் கேட்டகபட்டது இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி, ”தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் ஆணையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது தமிழகத்தின் 22வது மாவட்டமாக நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்துள்ளோம்.

நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மையம் மூலம் பெறப்பப்படும் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது குடும்ப ரீதியான பிரச்சினைகள் சட்டரீதியான பிரச்சினைகள் குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அனைத்து வழக்குகளுக்கும் உரிய தீர்வு காணப்பட்டதுடன் விட்டு விடாமல் பாதிக்கப்பட்ட நபர்கள் வீடுகளுக்கே சென்று பின்னாய்வு செய்யப்பட்டு அதற்கான தரவுகளும் சேகரிக்கப்படுகிறது.

இந்த நடைமுறை தமிழ்நாட்டிலேயே நெல்லை மாவட்டத்தில் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதிக அளவு குழந்தை திருமணங்கள் தருமபுரி கரூர் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. அந்தப் பகுதிகளில் உடனடியாக மகளிர் ஆணையம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குழந்தை திருமணங்கள் அதிக அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவு நடைபெற்றுள்ளது கடந்த இரண்டு மாதங்களாக பெரிய அளவில் குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தமிழறிஞர்களின் அருமை தெரியவில்லை... நெல்லையில் சீமான் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.