ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு இலவச முட்டை, பால், ரொட்டி வழங்கும் நெல்லை விஜய் மக்கள் இயக்கத்தினர் - Varisu

நெல்லை விஜய் மக்கள் இயக்கத்தினர், பள்ளி மாணவர்களுக்கு இலவச முட்டை, பால் மற்றும் ரொட்டி ஆகியவற்றை வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு இலவச முட்டை, பால், ரொட்டி வழங்கும் நெல்லை விஜய் மக்கள் இயக்கத்தினர்

author img

By

Published : Oct 10, 2022, 9:58 AM IST

திருநெல்வேலி: தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவரான விஜய்யின் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக கரோனா காலத்தில் உணவு வழங்கியது, ரத்ததான முகாம் நடத்தியது எனப் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி சார்பில்,அக்.9 முதல் ஒரு ஆண்டிற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு விலையில்லா முட்டை, பால் மற்றும் ரொட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இலவச முட்டை, பால், ரொட்டி வழங்கும் நெல்லை விஜய் மக்கள் இயக்கத்தினர்

இதுதொடர்பாக நெல்லை சிந்து பூந்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி தலைவர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியை நெல்லை பகுதி தொண்டரணி தலைவர் ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் செண்பகநாதன், சி.என். வில்லேஜ் ரமேஷ் உள்பட பல்வேறு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: வாரிசு படபிடிப்பு... ரசிகர்களை சந்தித்த விஜய்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.