திருநெல்வேலி: கார்த்திகை தீபத் திருவிழா நேற்று உற்சாகமாக கொண்டாடிய நிலையில், பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரம் அம்பேத்கர் காலனியில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மதுபோதையில் மளமளவென பற்றி எரிந்துக்கொண்டிருந்த சொக்கப்பனை தீயினுள் குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அருகில் இருந்த மக்கள் சொக்கப்பனை எரிவதை வீடியோ எடுக்கும் போது முருகன் தீயில் குதித்த காட்சியும் பதிவாகியுள்ளது. தற்போது முருகன் தீக்குள் குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: யார் தீபம் ஏற்றுவது? ஓபிஎஸ் குடும்பம் - திமுகவினர் இடையே மோதல்!