திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வட்டாரப் பகுதியில் கரோனா பாதிப்பானது கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாள்தோறும் இங்கு சராசரியாக 15 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், இவர்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ஆனால், வள்ளியூர் பகுதியில் ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் இருப்பதால் நோயாளிகளை உடனுக்குடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கூடுதல் ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும் என்று வள்ளியூர் வட்டார அரசு மருத்துவர்கள், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தற்போது கூடுதலாக ஒரு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள மூலிகை ப்ளூடூத் முகக்கவசம்!