ETV Bharat / state

காவல் அதிகாரியிடம் ரூ.7 லட்சம் மோசடி- நைஜீரியாவை சேர்ந்த இருவர் கைது - SMS to Karthikeyan s WhatsApp number

காவல் அதிகாரியிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த நைஜீரியாவைச் சேர்ந்த இருவரை நெல்லை போலீசார் சிங்கம் பட சூர்யா பாணியில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி குற்றவாளிகளை கைது செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் அதிகாரியிடம் ரூ.7 லட்சம் மோசடி- நைஜீரியாவை சேர்ந்த இருவர் கைது

author img

By

Published : Dec 4, 2022, 10:48 PM IST

திருநெல்வேலி: மணிமுத்தாறு 12ஆவது காவல் பட்டாலியனில் பணிபுரிபவர் கார்த்திகேயன். இந்நிலையில், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு பரிசு கூப்பன் விழுந்திருப்பதாகவும் அதற்காக முன் பணம் செலுத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு படத்துடன் மூன்று மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயனின் வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதை நம்பிய கார்த்திகேயன் தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.7 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் பரிசு கூப்பன் வராததால், ஆன்லைன் மோசடி கும்பலிடம் தான் ஏமாற்றது, அறிந்த கார்த்திகேயன் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பின்னர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் விழிப்புடன் இருக்கும்படி தமிழ்நாடு காவல் துறை தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் காவல் அதிகாரியிடமே மர்ம கும்பல் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

நெல்லை சைபர் கிரைம் போலீசார் தலைமையில் தனிப்படை: இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்ததில் நைஜீரியாவைச் சேர்ந்த நபர், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த முரளி மற்றும் வினய்குமார் ஆகியோரின் உதவியுடன் அதிகாரி கார்த்திகேயனிடம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

அதாவது நைஜீரிய நபருக்கு இருவரும் போலி முகவரியில் சிம்கார்டு சப்ளை செய்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி மேற்கண்ட முரளி மற்றும் வினய் குமார் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வழக்கின் முக்கிய குற்றவாளியான நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

சிங்கம் பட சூர்யா பாணியில் குற்றவாளிகளை கைது நெல்லை போலீசார் கைது செய்தனர்: குறிப்பாக காவல்துறையின் ஒட்டுமொத்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி சல்லடை சல்லடையாக அலசியுள்ளனர். அதன் பலனாக பஞ்சாப் மாநிலத்திலும் இதே போன்று ஒரு மோசடி நடைபெற்றது தெரியவந்தது.

எனவே அந்த வழக்கில் கிடைத்த ஆவணங்களையும் சேகரித்து விசாரணை மேற்கொண்டதில் கார்த்திகேயனிடம் மோசடியில் ஈடுபட்டது நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஸ்டான்லி (40) மற்றும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன் சோகாசர் (32) என்பதும் அவர்கள் இருவரும் பெங்களூரில் இருந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப உதவியோடு இது போன்று நாடு முழுவதும் அரசு அதிகாரிகள் உள்பட பலரை ஆன்லைன் மூலம் ஏமாற்றி பணம் சம்பாதிப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்து சென்று ஸ்டான்லி மற்றும் ராம்சன் சோகாசரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டாலும் கூட அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல்துறையினர் அவர்களை விரைந்து கைது செய்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் அதிகாரியின் வங்கி கணக்கில் கை வைத்த நைஜீரிய நபரை நெல்லை போலீசார் சிங்கம் பட சூர்யா பாணியில் செயல்பட்டு கண்டம் விட்டு கண்டம் தாண்டி குற்றவாளிகளை கைது செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பையும் மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:முதலமைச்சர் பயணித்த நெடுஞ்சாலையில் எஸ்ஐ பணம் வசூல்; போலி போலீஸ் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.