நெல்லை மாவட்டம் மாயமான் குறிச்சியிலிருந்து ஆலங்குளம் நோக்கி தனியார் மினி பேருந்து ஒன்று 50 பயணிகளோடு சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் பின்னால் வந்த மணல் லாரிக்கு வழிவிடும்போது, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் அப்பகுதிக்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் சில பேரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 32 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளும், பெண்களும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதால் அப்பகுதியினரிடையே இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.