ETV Bharat / state

நெல்லை கல்குவாரி விபத்து - பாறை இடிபாடுகளுக்குள் சிக்கி 17 மணி நேரமாகப் போராடியவர் உயிரிழப்பு!

கல்குவாரி விபத்தில் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கி 17 மணி நேரமாக உயிருக்குப் போராடியவரை மீட்புக்குழு உயிருடன் மீட்ட நிலையிலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நெல்லை கல்குவாரி விபத்து
நெல்லை கல்குவாரி விபத்து
author img

By

Published : May 15, 2022, 10:39 PM IST

திருநெல்வேலி: முன்னீர்பள்ளம் அருகே வெங்கடேஸ்வரா என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்றிரவு (மே 14) வழக்கம்போல் தகர்க்கப்பட்ட கற்களை இயந்திரம் மூலம் தள்ளும் பணிகள் நடைபெற்று வந்தன. லாரி ஓட்டுநர்கள் ராஜேந்திரன் (35), செல்வகுமார் (30), ஹிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன் (40), விஜய் (27), செல்வம் (27), லாரி கிளீனர் முருகன் (23) ஆகிய ஆறு பேர் கற்களை அள்ளும்போது சுமார் 300 அடி உயரத்தில் இருந்து திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு ஹிட்டாச்சி ஆப்ரேட்டர்கள் விஜய், முருகன் ஆகிய இருவரையும் இன்று (மே 15) காலை உயிருடன் மீட்கபட்டனர். மீதமுள்ள நான்கு பேரில் செல்வம் மட்டும் வெளிப்பகுதியில் முக்கால் பகுதி உடல் இடிபாடுகளுக்குள் சிக்கியபடி தன்னை காப்பாற்றும்படி சுமார் 17 மணி நேரம் கூக்குரலிட்டபடி உயிரை கையில் பிடித்து வைத்திருந்தார்.

இருப்பினும் அடுத்தடுத்து பாறைகள் சரிந்து விழுவதால் அவரை மீட்க முடியாமல் வீரர்கள் திணறினர். ஒருவழியாக 17 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு வீரர்கள் கயிறு கட்டி கீழே இறங்கி செல்வத்தை உயிருடன் மீட்டு உடனடியாக ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளித்து வந்த நிலையில் தற்போது செல்வம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து மீதமுள்ள மூன்று பேரை மீட்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் இரவு 8 மணிக்கு மேல் மீட்புப்பணி நிறுத்தப்பட்டு, நாளை மீட்புப்பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. செல்வம் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட 17 மணி நேரமாக இரவு, கடும் வெயில் என நிலைமையை சமாளித்து எப்படியாவது உயிர் பிரிந்துவிடக் கூடாது என போராடிய நிலையில் அவர் உயிருடன் மீட்கப்பட்டும் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: கண்முன்னே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவர்... செய்வதறியாது தவிக்கும் மீட்புப்பணியினர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.