திருநெல்வேலி: மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு ஏற்கனவே சில மணி நேரங்களுக்கு முன்பு தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டு நகராட்சிகளையும் 12 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
ஒரு நகராட்சியில் சுயேச்சைகள் பெரும்பான்மை இடங்களைப் பிடித்துள்ளனர். ஒரு பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. நான்கு பேரூராட்சிகளில் திமுக குறைவான இடங்களைப் பிடித்திருப்பதால் அந்த பேரூராட்சிகளைக் கைப்பற்றுவது யார் தலைவர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணி வெற்றி
தொடர்ந்து மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மட்டும் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது மாநகராட்சி வாக்கு எண்ணிக்கையும் முழுமையாக முடிவுபெற்றுள்ளது. மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், திமுக கூட்டணி 50 இடங்களைப் பிடித்து அமோக வெற்றிபெற்றுள்ளது.
மாநகராட்சி திமுக வசம்
இதுதவிர அதிமுக நான்கு இடங்களிலும் சுயேச்சை ஒரு இடத்திலும் மாநகராட்சியில் வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் நெல்லை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து மறைமுகத் தேர்தல் மூலம் மாநகராட்சி மேயர், துணை மேயர், நான்கு மண்டல குழுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: ஜெயக்குமாருக்கு சிறையில் சிறப்புச் சலுகைகள் மறுப்பு