ETV Bharat / state

நெல்லையில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் திடீர் மழை; மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

author img

By

Published : Apr 13, 2021, 10:48 PM IST

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் கோடை மழையின்போது மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் திடீர் மழை; மின்னல் தாக்கி பெண் பலி

திருநெல்வேலி: கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 100 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகிறது.

இந்த சூழ்நிலையில் கோடை வெயிலுக்கு இடையே கடந்த இரண்டு நாள்களாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மாலை நேரங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் (ஏப்.13) திருநெல்வேலி மாவட்டத்தில் திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக, மாவட்டத்தின் நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது.

திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை காமராஜர் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி (50) மழை நீரை பிடிப்பதற்காக, வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அப்போது பலத்த சத்தத்துடன் கூடிய மின்னல் தாக்கி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். திருநெல்வேலியில் கோடை மழையின்போது மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: திருவிழாக்கள் நடத்தக்கோரி நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.