திருநெல்வேலி மாவட்டத்தில் பனைமரம் குறித்த விழிப்புணர்வை சக மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில், அம்மாவட்ட அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி வளாகத்தில் இன்று பனை விதை நடும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் பாலகிருஷ்ணன், "பனை மரமானது நமது தட்பவெப்பநிலைக்கும், அனைத்து கால நிலைக்கும் ஏற்ற ஒன்று. கஜா புயலின்போது கூட பனை மரம் தாக்குப்பிடித்து நின்றது. இது போன்ற மரங்களை எங்கள் கல்லூரியிலும் நட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பணி நடைபெற்றது.
மாணவர்களின் இந்த முயற்சி வரவேற்க வேண்டியது. மேலும் இன்னும் சில வருடங்களில் பனை மரங்கள் அதிகம் உள்ள கல்லூரியாக, எங்களுடைய கல்லூரி இருக்கும்" என்றார் பெருமிதத்துடன்.