ETV Bharat / state

நெல்லை இருட்டுக்கடை செய்த தரமான சம்பவம்.. தூய்மைப் பணியாளர்களுக்கு அதிர்ச்சி! - திருநெல்வேலி

Tirunelveli Iruttukadai Halwa: வெள்ள பாதிப்புகளை அப்புறப்படுத்திய தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா நிர்வாகம், நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.

நிவாரண உதவி வழங்கி கௌரவித்த இருட்டுக்கடை அல்வா நிறுவனம்
நெல்லை வெள்ள சீரமைப்பு பணி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 12:52 PM IST

நெல்லை வெள்ள சீரமைப்பு பணி

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் கோரத்தாண்டவம் ஆடிய கனமழையால் பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் உடைமைகளையும், வியாபாரிகள் பல லட்சம் மதிப்பிலான பொருட்களையும் இழந்து பரிதவித்து வருகின்றனர்.

தற்போது மழை ஓய்ந்த நிலையில், நெல்லை மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். நெல்லை மாநகரில் வெள்ளம் வடிந்த இடங்களில் கடந்த 5 நாட்களாக மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுகாதாரப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மாநகரின் பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், தண்ணீர் வற்றிய நிலையில் அங்கு குப்பைகள் டன் கணக்கில் சேர்ந்தது.

இதையும் படிங்க: புகாரை விசாரிக்கத் தாமதம்: கரூரில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு..

இந்த குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் முழுவீச்சுடன் செயல்பட்டு அப்புறப்படுத்தினர். அதேபோல், தற்போது பல இடங்களில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை துப்புரவுப் பணியாளர்கள் சரி செய்து வருகின்றனர். இந்த நிலையில், நெல்லையின் அடையாளமாக கருதப்படும் உலகப் புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா நிறுவனத்தின் சார்பில், நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

நெல்லை மழை வெள்ள சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பெட்ஷீட், டவல் போன்ற நிவாரண உதவிகளை அந்த நிறுவனம் செய்துள்ளது. மேலும், தூய்மைப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு வரும் தூய்மைப் பணியாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக, இந்த நிவாரண உதவிகளை செய்துள்ளதாக இருட்டுக்கடை அல்வா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி: ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.