ETV Bharat / state

மாணவர்களுக்கு இணையவழி கைவினை பயிற்சி - திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம்

திருநெல்வேலி: அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி கைவினை பயிற்சி நடைபெற்றது.

கருத்தரங்கம்
கருத்தரங்கம்
author img

By

Published : Oct 22, 2020, 6:28 AM IST

திருநெல்வேலி அருங்காட்சியகம் சார்பில் இணையம் வாயிலாக அவ்வப்போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு வகையான கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கரோனோ காலகட்டம் என்பதால் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஜூம் செயலி வழியாக இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

சமீபத்தில் வன உயிரினங்களின் அவசியம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று (அக்டோபர் 21) அரசு அருங்காட்சியகம் சார்பில் இணையம் மூலம் ஜூம் செயலி வாயிலாக கைவினைப் பயிற்சி நடைபெற்றது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு அழகிய குங்கும சிமிழ் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை யூனிக் ஃபேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் கலை ஆசிரியர் கார்த்தீஸ்வரி நடத்தினார். அரசு அருங்காட்சியகத்தின் மாவட்டக் காப்பாட்சியர் சத்திய வள்ளி தலைமையில், பள்ளி - கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.