ETV Bharat / state

திமுக முன்னாள் மேயர் ஏன் வெட்டிக் கொலை? - stabbed

திருநெல்வேலி:  திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூன்று பேர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி
author img

By

Published : Jul 24, 2019, 10:40 AM IST

திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. திமுக முன்னாள் மேயரான இவர் தனது கணவருடன் வசித்துவந்தார். இந்நிலையில், நேற்று மாலையில் அவரது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய மூன்று பேரையும் கண் இமைக்கும் நேரத்தில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நகை பணத்திற்காக திமுக முன்னாள் மேயர் வெட்டி கொலை!

இக்கொலை சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

'இச்சம்பவத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். மேலும் நகை, பணத்திற்காக இந்தக் கொலை நடந்து இருக்காலம். வீட்டில் நகைகள், மேலும் சில முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளன. மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது' என்றார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:நெல்லையில் திமுகவை சேர்ந்த முன்னாள் மாநகராட்சி மேயர் உமாமகேஸ்வரி உட்பட 3 பேர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் நேரில் விசாரணை.

நெல்லை மாநகராட்சி திமுக முன்னாள் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி, மாநகராட்சியின் முதல் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது, நெல்லை - ரெட்டியார்பட்டி அரசு பொறியியல் கல்லூரி எதிர்புறம் குடியிருந்து வருகிறார். அவருடைய கணவர் முருகசங்கரன் நெடுஞ்சாலை துறை ஓய்வு பெற்ற பொறியாளர். உமாமகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மாரி வீட்டில் இருக்கும் போது இன்று பிற்பகல் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேரையும் கம்பியால் தாக்கி கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் சரவணன் மற்றும் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆதாயத்திற்காக செய்யப்பட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆணையாளர் பாஸ்கர் கூறுகையில்,

ஆதாயத்திற்கு நடைபெற்ற கொலை எனவும் மதியமே நடந்திருக்கலாம். 3 பேர் கொண்ட கும்பல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் இந்த சம்பவம் குறித்து மேற்படி விசாரணைக்கு உதவி ஆணையர் வெங்கட கிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் பேட்டியில் தெரிவித்தார்.

முன்னாள் மேயருக்கு இப்படி ஒரு நிலைமை என்பதால் நெல்லை மக்களின் பாதுகாப்பு நிலை குறித்து பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் தரப்பில் கேள்வி எழுப்பி வருக்கின்றனர். கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரி வீட்டில் நகைகள் காணாமல் போயுள்ளது ஆனால் மேலும் சில முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதா அல்லது குடும்ப தகராறு காரணமாக என்றும் பல கேள்விகள் எழுகின்றன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.