ETV Bharat / state

திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம் - திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகிகள்

திருநெல்வேலி மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

வாக்குவாதம்
வாக்குவாதம்
author img

By

Published : Jan 22, 2022, 3:16 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம், வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி உள்ளிட்டவை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தேர்வு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்பாளர்கள் தேர்வு செய்யக்கூடிய பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட அதிமுக சார்பில் வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதற்கு அதிமுக மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா தலைமை தாங்கினார்.

வாக்குவாதம்

கூட்டத்தில் வாக்குவாதம்

இந்த கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர்கள் சுதா பரமசிவம், ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் தேர்தலில் நிர்வாகிகள், வேட்பாளர்கள் செயல்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார்.அப்போது கூட்டத்திலிருந்த மற்ற நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சமரசப்படுத்தி தொடர்ந்து கூட்டத்தை நடத்தினார்.

இதையும் படிங்க: ஆறே நாளில் ரூ.2.36 கோடி வசூல் - வணிக வரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.