ETV Bharat / state

பல் பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் உட்பட 15 பேருக்கும் ஜாமீன்..! - tooth extraction case

Tirunelveli court: பல் பிடுங்கிய விவகாரத்தில் 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திரிவேணி உத்தரவிட்டுள்ளார்.

Tirunelveli court:
பல் பிடுங்கிய விவகாரம்: 15 பேருக்கும் ஜாமீன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 6:17 PM IST

Updated : Dec 15, 2023, 6:44 PM IST

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி வி.கே.புரம் ஆகிய காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளின் பற்களைப் பிடுங்கி சித்திரவதை செய்ததாக அப்போதைய உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் (ஏஎஸ்பி) மீது எழுந்த புகார் குறித்து அரசின் உயர்மட்ட குழு விசாரணையைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், புகாருக்கு உள்ளான ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி சார்பில் பதியப்பட்ட வழக்கு இன்று (டிச.15) நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏஎஸ்பி பல்வீர்சிங், ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உள்பட 14 பேர் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, ஏஎஸ்பி தரப்பில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையின் நகல் கேட்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதுவரை ஜாமீன் வாங்காததால் குற்றப்பத்திரிக்கை நகலைக் கொடுக்கக் கூடாது எனப் பாதிக்கப்பட்ட நபர்களின் வழக்கறிஞர் மகாராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, நீதிபதி வழக்கைப் பிற்பகலுக்கு ஒத்திவைத்த நிலையில் மீண்டும் 3 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, பல் பிடுங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட கட்டிங் பிளேயர், கல் உள்ளிட்டவை சிபிசிஐடி போலீசாரால் பறிமுதல் செய்யப்படவில்லை. ரத்தக் கரைப் படிந்த உடைகளும் பறிமுதல் செய்யப்படவில்லை பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்ற தனியார் கார்களையும் பறிமுதல் செய்யப்படவில்லை.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் நீதிமன்றத்தில் வாதிட்டார். உடனே, கட்டிங் பிளேயர், கல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதா? என நீதிபதி திரிவேணி சிபிசிஐடி போலீசாரிடம் கேள்வி எழுப்பினார்.

ரத்தக் கரைப் படிந்த லத்தி மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டிங் பிளேயர், கல் உள்ளிட்டவை காணவில்லை என்பதைக் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். தடயங்களை மறைத்ததற்கான சட்டப் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது என்று சிபிசிஐடி போலீசார் கூறினர்.

தடையங்களை மறைத்தால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பது பொருள். முந்தைய வழக்குகளில் உள்ள உத்தரவுகளை மேற்கோள் காட்டிப் பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் மகாராஜன் வாதம் செய்தார். மேலும், தடயங்களை மறைத்தால் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து தடயங்களைப் பறிமுதல் செய்வது தான் நியாயம். உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திரிவேணி மீண்டும் வழக்கு விசாரணையை 5 மணிக்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில், 5 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில், சிபிசிஐடி தரப்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்காததால், நீதிபதி திரிவேணி பல்வீர் சிங் உட்பட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பதவியேற்றார் பஜன் லால் சர்மா!

Last Updated : Dec 15, 2023, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.