ETV Bharat / state

'ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் பதற்றமில்லாமல் கையாண்டோம்' ஆட்சியர் விஷ்ணு கோபால்! - tirunelveli collector

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் திறமையாக கையாண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கோபாலை பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.

vishnu gopal
விஷ்ணு கோபால்
author img

By

Published : May 24, 2021, 1:33 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கோபால்

ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கோபால் தலைமையிலான குழுவினர், தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். அண்மையில் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் அளவு திடீரென முற்றிலும் குறைந்ததுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அண்டை மாவட்டத்திலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டரை வரவழைத்து தக்க நேரத்தில் ஆக்ஸிஜனை தட்டுப்பாட்டை சரிசெய்தார்.

அன்றிரவு முழுவதும் மருத்துவமனையிலே இருந்து, தக்க உதவிகளை செய்த ஆட்சியிரின் செயலை பலரும் பாராட்டினர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கோபாலிடம் ஈடிவி பாரத் முன்வைத்த சில கேள்விகளுக்கான பதிலை பார்க்கலாம்.

ஆக்ஸிஜன் வீணாவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ?

ஆக்ஸிஜன் நுகர்வைக் கண்காணிக்க 30 செவிலியர்கள், ஆறு பயிற்சி மருத்துவர்கள் தலைமையில் குழு அமைத்துள்ளோம். குறிப்பாக, இரவு நேரங்களில் இந்தச் செவிலியர்கள் படுக்கையில் உள்ள நோயாளிகளின் ஆக்ஸிஜன் சப்ளையைத் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

சப்ளையில் ஏதாவது கசிவோ அல்லது அழுத்தமோ இருந்தால் அவற்றை உடனடியாக சரி செய்து விடுவார்கள். இதன் மூலம் நுகர்வு சற்று குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மிகக் கடுமையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவியதே அப்போது நிலைமை எவ்வாறு சமாளித்தீர்கள்?

ரொம்பவே கஷ்டமான சூழல் தான். ஆனாலும், பதற்றமில்லாமல் இருந்தோம். அன்றிரவு முழுவதும் தூங்காமல், மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றினோம். அண்டை மாவட்டத்திலிருந்து உடனடியாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வரவழைக்கப்பட்டு நிலைமையைச் சமாளித்தோம்.

கரோனா சிகிச்சை மற்றும் ஆக்ஸிஜன் தேவை குறித்து எப்போதெல்லாம் மருத்துவர்களுடன் பேசுகிறீர்கள்?

தினமும் இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை மருத்துவர்களுடன் பேசி வேலை செய்து வருகிறேன். காலை 8 மணி, பிற்பகல் 2 மணி, இரவு 8 மணி ஆகிய மூன்று நேரங்களில் மருத்துவர்கள், எனக்கு ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் தேவை குறித்து தகவல் அளிப்பார்கள். அண்டை மாவட்ட ஆட்சியர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாகப் பணிபுரிந்து வருகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.