திருநெல்வேலி: பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெகன், பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த 30 ஆம் தேதி இரவு வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது, ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் ஜெகனை சரமாரியாக வெட்டி கொலை விட்டு தப்பிச் சென்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே ஜெகன் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் ஜெகனின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜெகன் கொலை தொடர்பாக, பாளையங்கோட்டை சேர்ந்த திமுக பிரமுகர் பிரபு, அவருக்கு உடந்தையாக இருந்த விக்கி உட்பட 12 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் ஆய்வாளர் காசி பாண்டியன், கடந்த சில மாதங்கள் முன்பு தான் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு மாறுதலாகி வந்துள்ளார். மூளிக்குளம் பகுதியில் பிரபு திமுகவை பலப்படுத்தி வைத்திருப்பதாகவும் ஜெகன் அதை மாற்றி பாஜகவை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். உயிரிழந்த ஜெகன் மற்றும் திமுக பிரமுகர் பிரபு இடையே பல மாதங்களாக மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. குறிப்பாக இருவரில் யார் முதலில் கொலை செய்வது என திட்டமிட்டு செயல்படும் அளவுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
கோயில் நிகழ்ச்சி கல்யாண நிகழ்ச்சி போன்றவற்றில் ஜெகன் தனக்கென கூட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். பிரபுவை பொறுத்தவரை முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏவுக்கு வலது கரமாக செயல்பட்டு வருகிறார். எனவே அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த இருவர் மோதிக்கொண்டதால் இவ்விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இரு தரப்பிலும் கொலை விழுவதற்கான அறிகுறி இருந்துள்ளது.
எனவே முன்னெச்சரிக்கையாக இருக்கும் படி உளவுத்துறை சார்பில் முன்கூட்டியே வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜெகனை தீர்த்து கட்ட பிரபு, மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டம் தீட்டியுள்ளார். பலமுறை ஜெகனை கொலை செய்வதற்காக கும்பல் நோட்டமிட்டுள்ளது.
எனவே காவல்துறை இன்னும் அதிக கவனத்தோடு செயல்பட்டிருந்தால் ஜெகன் கொலையை தடுத்திருக்கலாம் என்பதால் தான் இன்று காவல் ஆய்வாளர் காசிமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி சரண்டர்; அரசியல் நெருக்கடி காரணமா?-அண்ணாமலை பேட்டி!