திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பைக் குடியிருப்பைச் சேர்ந்த நாகராஜன் மகள் நித்திஷா (7), மகன் நித்திஷ் (5) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சுதாகரின் மகன் கபிசந்த் (4) ஆகிய மூன்று சிறுவர்களும், நாகராஜின் சகோதரர் மணிகண்டனின் காருக்குள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, காரின் கதவுகள் திடீரென மூடப்பட்டதால், அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிறுவர்களுக்கு காரின் கதவை திறக்க தெரியாததால், மூவருக்கும் மூச்சுத் திணறல் அதிகமாகி அவர்கள் காரின் உள்ளேயே உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பு சபாநாயகர் அப்பாவுவின் சொந்த ஊர் ஆகும்.
இதையும் படிங்க: சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்... நான்காவது நபர் கைது...