தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருநெல்வேலி போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அரசுப் போக்குவரத்து அனைத்து சங்க கூட்டமைப்புச் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
- 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்,
- நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்,
- 1998 ஒப்பந்தத்தின்படி அனைவரையும் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
- 240 நாளில் பணி நிரந்தரம் என்பதை உறுதிசெய்ய வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'மக்கள் செல்லாத மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பூங்கா...'