ETV Bharat / state

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்!

திருநெல்வேலி: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், குடும்பத்தினருக்குச் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

thirunelveli-special-corona-camp
thirunelveli-special-corona-camp
author img

By

Published : Jun 4, 2021, 10:00 AM IST

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாள்களாக கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன.

அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 84 தடுப்பூசி மையங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தவிர மீதமுள்ள அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 2ஆம் தேதி இரவு தமிழ்நாடு அரசு நெல்லை மாவட்டத்திற்கு கோவிஷீல்டு ஆறாயிரம், கோவாக்சின் ஆயிரம் என மொத்தம் ஏழாயிரம் தடுப்பூசிகள் அனுப்பிவைத்தது.

இதையடுத்து இந்தத் தடுப்பூசிகளை நேற்று (ஜூன் 3) மாவட்டம் முழுவதும் உள்ள மையங்களுக்கு சுகாதார அலுவலர்கள் அனுப்பிவைத்தனர். மிகக் குறைந்த அளவே தடுப்பூசி அனுப்பப்பட்டதால் மையங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையில் நெல்லை மாவட்ட அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்துவரும் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு வண்ணாரப்பேட்டையில் உள்ள போக்குவரத்துப் பணிமனையில் நேற்று சிறப்பு கரோனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று நேற்று இந்த முகாம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட சுகாதார அலுவலர்கள் மொத்தம் 130 தடுப்பூசிகளை வழங்கினர்.

அதன்பேரில் போக்குவரத்து ஊழியர்கள், குடும்பத்தினருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. தொடர்ந்து முகாம் நடத்தப்பட்டு போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: 45 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் முத்தப்பன் வாய்க்கால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.