ETV Bharat / state

பக்தர்களின்றி நடைபெற்ற காந்திமதி அம்பாள் வளைகாப்பு நிகழ்ச்சி - aadi pooram

கரோனா பரவல் காரணமாக நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வளைகாப்பு நிகழ்ச்சி பக்தர்களின்றி நடைபெற்றது.

பக்தர்களின்றி நடைபெற்ற காந்திமதி அம்பாள் வளைகாப்பு நிகழ்ச்சி

author img

By

Published : Aug 4, 2021, 7:30 PM IST

திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற ஆலயங்களில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.

பக்தர்களின்றி நடைபெற்ற காந்திமதி அம்பாள் வளைகாப்பு நிகழ்ச்சி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (ஆக.4) அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்பாளுக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் இன்றி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 1 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆக.10 ஆம் தேதி அம்பாளுக்கு முளைக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வழக்கமாக ஆடிப்பூர திருவிழாவையொட்டி நடைபெறும் அம்பாள் வளைகாப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள், ஆனால் கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் பக்தர்களின்றி கோவில் குருக்கள் மட்டுமே கலந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்பு: தேசிய பாதுகாப்புக் குழு ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.