தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (பிப்.26) அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தும் பணிகளில், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் மாவட்டத்தில் நேற்று முதல் அரசு விளம்பரங்கள் அகற்றும் பணிகள் தொடங்கின. அதைத் தொடர்ந்து தற்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆலோசனை நடத்தினார்.
இதில், நெல்லை மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர். வாக்கு மையங்கள் அமைப்பது, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிப்பது, அரசியல் கட்சிகளின் பரப்புரைகளை கண்காணிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி! - மாணவர்கள் பங்கேற்பு!