ETV Bharat / state

திருநெல்வேலியல் 22 பேருக்கு கரோனா - மேலப்பாளையம் அடைப்பு - Corona for Tirunelveli 22 people

திருநெல்வேலி: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று வந்த நபர்களில் நெல்லையைச் சேர்ந்த 22 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியை தனிமைப்படுத்தி உள்ளே, வெளியே யாரும் சென்றுவர தடைவிதித்து காவல் துறையினரின் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலப்பாளையம் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது

author img

By

Published : Apr 1, 2020, 8:17 AM IST

நெல்லை மாவட்டத்திலிருந்து டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்ற 22 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த 16 நபர்களுக்கும், வள்ளியூர், புளியங்குடி பகுதியைச் சேர்ந்த ஆறு நபர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

மேலப்பாளையம் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பிற பகுதிகளிலிருந்து மேலப்பாளையம் செல்லும் அனைத்து சாலைகளின் வழிகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இல்லாத வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலப்பாளையத்திலுள்ள பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும், அந்தந்த தெரு முனைகளிலேயே பலசரக்கு, காய்கறிகள் கிடைக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மேலப்பாளையம் சாலை, தெருக்களில் இருசக்கர வாகனம் செல்லவும் தடைவிதிக்கப்படுகிறது. உடல்நலக்குறைவு, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் வரலாம். அதுவும் காவல்துறையினர் முழுவிபரங்களையும் பதிவு செய்துகொள்வார்கள். மேலும் மேலப்பாளையத்திலிருந்து யாரும் மற்ற பகுதிக்கு வருதல் கூடாது, வெளிநபர்கள் மேலப்பாளையம் பகுதிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .

இந்த உத்தரவைத் தொடர்ந்து மேலப்பாளையம் செல்லும் அனைத்துப் பகுதிகளும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அப்பகுதியில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு சார்பில் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் 36 அறைகளை தயார்படுத்தி கரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் குடும்பத்தினர் அங்கு தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: மஞ்சம்பட்டி காய்கறி சந்தையை இடம் மாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.