திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு 16 வயதில் திருமணமாகியுள்ளது. அப்பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை பிறந்து ஆறு நாட்களேயாகியுள்ளது என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த பாதர் வல்ராம் - கிறிஸ்டி தம்பதியினர் குழந்தை ஒன்றை தத்தெடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து 16 வயதில் திருமணமான பெண்ணின் பச்சிளம் குழந்தையை அரசு அலுவலர்களுக்குத் தெரியபடுத்தாமல் சட்டவிரோதமாக தத்தெடுத்துள்ளனர். ராஜஸ்தான் தம்பதியினரின் சட்டவிரோதமான செயலால், காவல்துறையினர் அவர்களை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் முடிவில் அக்குழந்தை கடத்தப்பட்டதா அல்லது ஏன் உரிய அலுவலர்கள் முன்னிலையில் தத்தெடுக்கப்படவில்லை என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.