ETV Bharat / state

"பல்லை போலீசார் பிடுங்கல... கீழே விழுந்ததில் உடைஞ்சிருச்சு..." - இளைஞர் பல்டி

திருநெல்வேலி அருகே போலீசார் தாக்கியதில் பல் உடைந்ததாக புகார் கூறிய இளைஞர், சார் ஆட்சியர் விசாரணை முடிந்து திரும்பிய போது, கீழே விழுந்ததில் பல் உடைந்ததாகக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Mar 29, 2023, 5:51 PM IST

Teeth issue
பல் பிடுங்கப்பட்ட விவகாரம்
பல் பிடுங்கப்பட்ட விவகாரம்

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) இருந்தவர், பல்வீர் சிங். தனது சரகத்துக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளிடம், அவர் மிக கொடூரமாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகார் எழுந்தது.

குறிப்பாக விசாரணை கைதிகளின் பற்களை கட்டிங் பிளேயரை கொண்டு பல்வீர் சிங் பிடுங்கி எடுத்ததாகவும், வாயில் ஜல்லிக் கற்களை போட்டு கடிக்க சொன்னதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர் குற்றம்சாட்டினர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. சூர்யா, வேத நாராயணன், மாரியப்பன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

ஏஎஸ்பி பல்வீர் சிங் மீதான புகார் குறித்து விசாரிக்க சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலமை, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நியமித்தார். அதன்படி பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர்களுக்கு சம்மன் அனுப்பி, நேரில் வரவழைத்து சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். நேற்று (மார்ச் 28) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் பங்கேற்ற சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம், இளைஞர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக, விசாரணை நிலை குறித்து விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், ஏஎஸ்பி பல்வீர் சிங் தாக்கியதாக கூறப்படும் சூர்யா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 29) ஆஜரானார். விசாரணை முடிந்த பின் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ''போலீஸ் காவலில் நான் இருப்பதாக சிலர் வதந்தியைக் கிளப்பியுள்ளனர். வேறொரு விசாரணைக்காக இங்கு வந்துள்ளேன். நான் கீழே விழுந்ததில் தான் பல் உடைந்தது. சார் ஆட்சியரிடம் அனைத்தையும் கூறிவிட்டேன். அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்" என மிரட்சியுடன் பதில் அளித்தார்.

பின்னர் சூர்யாவை உடன் வந்த இருவர் அவசர அவசரமாக, மருத்துவப் பரிசோதனைக்காக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். காவல்துறை அதிகாரி மீது புகார் கூறிய இளைஞர், பின்னர் அதை மறுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணைய ஐஜிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத்தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஏஎஸ்பி பல்பீர் சிங் சஸ்பெண்ட் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.