ETV Bharat / sports

ஸ்பெயின் லாலிகா கால்பந்தாட்ட பயிற்சி நிறுவனம் தேனி தனியார் பள்ளியுடன் ஒப்பந்தம்! - LaLiga Football Coaching Institute - LALIGA FOOTBALL COACHING INSTITUTE

ஸ்பெயின் நாட்டின் லாலிகா கால்பந்தாட்ட பயிற்சி நிறுவனம் தேனியில் உள்ள தனியார் பள்ளியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

பயிற்சியாளர் மிகுவல் காசல்
பயிற்சியாளர் மிகுவல் காசல் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2024, 12:04 PM IST

தேனி: எட்டு வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி சிறந்த கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்க திட்டமிடப்பட்டு, உலக அளவில் கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய ஸ்பெயின் நாட்டின் லாலிகா கால் பந்தாட்ட பயிற்சி நிறுவனம், தேனியில் தனியார் பள்ளியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நூறாண்டுகளுக்கு மேலாக லாலிகா கால் பந்தாட்ட பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய லாலிகா கால்பந்தாட்ட பயிற்சி மையம், இந்தியாவில் பல்வேறு தனியார் பள்ளிகளில் ஒப்பந்தம் போட்டு கால்பந்தாட்ட பயிற்சி வழங்கி வருகிறது.

தனியார் பள்ளியுடன் ஒப்பந்தம்: இந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் செயல்படும் கல்விக் குழும பள்ளியுடன், ஸ்பெயின் நாட்டின் லாலிகா கால்பந்து பயிற்சி மையம் ஒப்பந்தம் போடப்பட்டு, நேற்று துவக்க விழா நடைபெற்றது. இதில் லாலிகா கால்பந்தாட்ட பயிற்சி மையத்தின் தொழில்நுட்ப பயிற்சியாளர் மிகுவல் காசல், பெரியகுளத்தில் உள்ள கல்விக் குழும பள்ளிக்கு வந்து குத்துவிளக்கேற்றி லாலுகா கால் பந்தாட்ட பயிற்சி மையத்தின் பயிற்சி குறித்து விளக்கினார்.

இதையும் படிங்க: AIR Show பார்க்க மெரினா போறீங்களா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

முதற்கட்ட பயிற்சி: இதனைத் தொடர்ந்து, அப்பள்ளியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் எட்டு வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சியைத் துவக்கி வைத்து, அவர்களுக்கு கால்பந்தாட்ட முதற்கட்ட பயிற்சியை வழங்கினார். இதில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கால்பந்தாட்ட பயிற்சி மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து லாலிகா கால்பந்தாட்ட பயிற்சி மையத்தின் தொழில்நுட்ப பயிற்சியாளர் மிகுவல் காசல் கூறியதாவது, “லாலிகா கால்பந்தாட்ட பயிற்சி மையம் ஸ்பெயின் நாட்டில் நூறாண்டுகளாக இயங்கி வருவதோடு, இந்தியாவில் இதுவரையில் 22 பள்ளிகளில் பயிற்சி மையங்களை துவங்கி உள்ளது.

இந்தியாவில் புனேவைச் சேர்ந்த காஜல் டிசோசா என்ற பெண், லாலிகா அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு 19 வயதிற்கு உட்பட்ட உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றவர். உலக அளவில் பல்வேறு கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய லாலிகா கால்பந்தாட்ட கழகம் இந்தியாவிலும் சிறந்த வீரர்களை உருவாக்க திட்டமிட்டு பயிற்சியை துவங்கியுள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.