ETV Bharat / state

'திமுக பொய்யான அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்துள்ளது'- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - political news in tamil

மக்களின் ஆதரவை பொறுத்து கொள்ள முடியாமல் ஸ்டாலின் வேண்டும் என்றே அதிமுக ஆட்சி குறித்து ஆளுநரிடம் பொய்யான அறிக்கை கொடுத்துள்ளார் என்றும் இதற்கெல்லாம் தேர்தல் யுத்தத்தில் தக்க பதிலடி கொடுப்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

The DMK has given a false statement to the Governor says tn cm
'திமுக பொய்யான அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்துள்ளது'- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Dec 22, 2020, 7:14 PM IST

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் அடுமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நெல்லை வழியாக கன்னியாகுமரி சென்றார். முன்னதாக நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் மாவட்ட அதிமுக சார்பில் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி திறந்த ஜீப்பில் நின்றபடி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். பிறகு தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. ஜெயலலிதா மறைந்தாலும் அவரது திட்டம் இன்னும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறது. திமுக போன்று எத்தனை எதிர்கட்சிகள் தேர்தலில் நின்றாலும் அத்தனையும் முறியடித்து வெற்றி பெறுவோம். இது உழைப்பால் உயர்ந்த இயக்கம். எவராலும் இதை தகர்க்க முடியாது.

'திமுக பொய்யான அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்துள்ளது'- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் உருவான இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கிறார்கள். வேண்டும் என்றே திட்டமிட்டு அரசு மீது அவதூறு பரப்புகிறார்கள் இதையெல்லாம் தேர்தலில் முறியடித்து அதிமுகதான் மீண்டும் ஆட்சியில் அமரும். கரோனோ, புயலால் பல மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு எல்லா இல்லங்களிலும் தை பொங்கல் பொங்க வேண்டும் என்பதற்காக 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைத்தார்ர்களுக்கு 2,500 ரூபாய் வழங்குவோம் என அறிவித்தோம். இதையெல்லாம் பொறுத்து கொள்ள முடியாத ஸ்டாலின் வேண்டும் இன்று ஆளுநரிடம் புகாரளித்துள்ளார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளில் இம்மியளவும் உண்மை கிடையாது.

பொய்யான அறிக்கையைத் தயாரித்து ஆளுநரிடம் கொடுத்துள்ளார். இதற்கெல்லாம் சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் 2021 தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். உங்கள் எண்ணங்களை பிரதிபலிக்கிற முதலமைச்சராக நான் செயல்பட்டு வருகிறேன். ஸ்டாலின் வேண்டும் என்றே இந்த ஆட்சி மீதும் அமைச்சர்கள் மீதும் அவதூறு பரப்புகிறார். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி தேர்தல் தான். இந்த தேர்தல் யுத்தத்தில் அதிமுக தொண்டர்கள் வீறு கொண்டு எழுந்து ஒட்டு மொத்த மக்களின் ஆதரவை பெற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ’கமல், ரஜினிக்காக வாக்கை வீணாக்க மக்கள் தயாரில்லை’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.