ETV Bharat / state

கேட்டவுடன் லேப் டாப் ..திருநங்கை மாணவிக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஆட்சியர்! - etv bharat tamil news

திருநெல்வேலியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் திருநங்கை மாணவி கேட்ட லேப்டாவை உடனே வழங்கி மாவட்ட ஆட்சியர் இன்ப அதிர்ச்சி அளித்தார்.

திருநங்கை மாணவிக்கு அறிவுரையுடன் காத்திருந்த இன்ப அதிர்ச்சி: மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Nov 30, 2022, 6:39 AM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 மாதத்திற்கு ஒருமுறை திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்ட ஆட்சியரின் சீரிய முயற்சியால் திருநங்கைகளுக்கென தனியாக குறைதீர் கூட்டத்தை நடத்தி அவர்களுக்கு தேவையானவற்றை உடனுக்குடன் அதிகாரிகள் நிறைவேற்றி கொடுக்கவும், அடுத்தடுத்து நடக்கும் கூட்டத்தின் மூலம் திருநங்கைகளால் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றவும் அறிவுறுத்தப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்த மாதத்திற்கான திருநங்கைகள் குறைதீர் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாவது தளத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் எடுத்துரைத்தனர்.

திருநங்கை மாணவிக்கு அறிவுரையுடன் காத்திருந்த இன்ப அதிர்ச்சி: மாவட்ட ஆட்சியர்

இதில் பெரும்பாலான திருநங்கைகள் இலவச வீட்டு மனை பட்டா, கல்வி உதவித் தொகை, தொழில் செய்வதற்கான தொழில் கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்தில் பேசிய நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சௌபர்ணிகா, நெல்லை பழைய பேட்டை பகுதியில் இயங்கும் அரசு பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.எஸ்.டபிள்யூ படித்து வருகிறார்.

மேலும் தான் பெண்கள் கல்லூரியில் படித்து வரும் நிலையிலும் ஆண் பெயராக இருக்கும் எனது பெயரை மாற்றிட கோரிக்கை மனு அளித்து, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும் வள்ளியூரில் இருந்து தினமும் பழைய பேட்டை பகுதியில் உள்ள கல்லூரிக்கு வந்து செல்வதற்கான இலவச பேருந்து பயண அட்டை, திருநங்கைகளுக்கான கல்வி உதவித் தொகை உள்ளிட்டவை வழங்கிடவும் கோரிக்கை வைத்தார்.

எம்.எஸ்.டப்ள்யூ படித்து வரும் தனக்கு கல்லூரி படிப்புக்கு தேவையான மடிக்கணினி வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்று மற்றவர்கள் குறைகள் கேட்கப்பட்டு இறுதியாக பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பேசி முடித்து கூட்டம் நிறைவு பெறக்கூடிய நிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்ப அதிர்ச்சியாக மடிக்கணினி கேட்டு கோரிக்கை வைத்த சௌபரணிகா என்ற மாணவியை அழைத்து புதிய லேப்டாப் ஒன்றை மாணவிக்கு கொடுத்தார்.

பிறகு மாணவியிடம் லேப்டாப்பை வழங்கும் போது தொடர்ந்து கவனத்துடன் படிப்பை மேற்கொண்டு உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.

இதையும் படிங்க: "டிசம்பர் 6" உச்சக்கட்ட பாதுகாப்பில் கோவை நகரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.