ETV Bharat / state

கடந்த எட்டு மாதங்களாக கோரிக்கை நிறைவேறவில்லை.. திமுக பெண் கவுன்சிலர் தர்ணா..! - DMK female councilor

திருநெல்வேலியில் கடந்த எட்டு மாதங்களாகத் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, திமுக பெண் கவுன்சிலர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 20, 2022, 3:24 PM IST

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (அக். 20) நடைபெற இருந்த நிலையில், திமுக வழக்கறிஞர் ஒருவர் மறைவு காரணமாக திடீரென கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி மேயர் பிஎம்.சரவணன் அறிவித்தார்.

இந்த நிலையில் மாநகராட்சியின் ஏழாவது வார்டு திமுக பெண் கவுன்சிலர் இந்திரா மணி, கருப்பு சேலை அணிந்தபடி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து அவர் அலுவலகத்தின் நுழைவு வாசலில் தரையில் அமர்ந்து கையில் பதாகை ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அந்த பதாகையில், ‘பெண்களுக்குச் சம உரிமை அளிக்கும் ஸ்டாலின் ஆட்சியில், கடந்த எட்டு மாதங்களாகப் பெண் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளைத் திருநெல்வேலி மாநகராட்சியில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அவரை மேயரிடம் அழைத்துச் சென்றனர். பின்னர் தனது கோரிக்கையை கவுன்சிலர் இந்திரா மணி, மேயரிடம் தெரிவித்தார். அப்போது தனது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்டமாகப் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக இந்திரா மணி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கவுன்சிலர் இந்திரா மணி, “கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு கோரிக்கைகள் குறித்து மேயரிடம் முறையிட்டும், எந்த பணிகளும் எனது பகுதியில் நடைபெறவில்லை. இதனால் மக்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், எனது பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன்” எனத் தெரிவித்தார்.

நெல்லை மாநகராட்சியின் ஏழாவது வார்டு திமுக பெண் கவுன்சிலர் இந்திரா மணி தர்ணா

இதையும் படிங்க: திமுக - பாஜக நிர்வாகிகள் மோதல்; போலீசார் வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.