ETV Bharat / state

அமெரிக்காவில் உடலுறுப்பு தானம் செய்த தமிழக மாணவன்..! திருநெல்வேலியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!

Student donated his organs in US: அமெரிக்காவில் உடலுறுப்பு தானம் செய்த திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் சகாய ஜெபாஸ் பிரஜோப் உடலுக்குத் தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

Student Who Donated His Organs In The US
அமெரிக்காவில் உடலுறுப்பு தானம் செய்த தமிழக மாணவன் - திருநெல்வேலியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 10:03 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள மூலக்காடு ஊரைச் சார்ந்த சகாய தாமஸ் ரூபன் - வின்சி தம்பதி குவைத் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். அவர்களது மூத்த மகன் சகாய ஜெபாஸ் பிரஜோப், குவைத் நாட்டில் உள்ள இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல் எனும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், சகாய ஜெபாஸ் பிரஜோப் உள்ளிட்ட 55 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமெரிக்கா நாட்டில், புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்குக் கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் ஆர்லாண்டோவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

இந்த சூழலில், நவம்பர் 23ஆம் தேதி காலை பிரஜோப் மற்ற குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு பிரஜோப்பை சோதித்த மருத்துவர்கள் பத்து முதல் பதினான்கு நிமிடங்கள் தண்ணீருக்கு அடியிலிருந்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பிரஜோப்பின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் நவம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை பெரும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். தமிழக அரசும் மாணவரின் உடல்நிலை பற்றி அவ்வப்போது விசாரித்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

டிசம்பர் 4ஆம் தேதி அன்று அவரது பெற்றோர் அனுமதியுடன் அமெரிக்காவில் அவரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. தொடர்ந்து பலரும் அவரால் பயன் அடைந்து உள்ளனர். பிரஜோப் மற்றும் அவரது பெற்றோரின் செயலை பாராட்டி பத்திரமும் பதக்கமும் அமெரிக்காவில் வழங்கப்பட்டது.

தற்போது, பிரஜோப்பின் உடல் இன்று (டிச 15) அவரது சொந்த கிராமமான திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள மூலக்காடு கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள புனித ராயப்பர் தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றது.

இதில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும், தமிழக அரசின் சார்பில் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்ற அரசு ஆணையின் பேரில் பிரஜாப்பின் உடலுக்குச் சேரன் மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் உள்ளிட்ட பலர் மலர் தூவி அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பல் பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் உட்பட 15 பேருக்கும் ஜாமீன்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.