நெல்லை மாவட்டம் நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தவர் முருகன் (58). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இன்று (செப்.12) அதிகாலை உயிரிழந்தார். இதனையடுத்து உதவி காவல் ஆய்வாளர் முருகனின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கரையிருப்பு பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதியாக காவல்துறை சார்பில், 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் அவரது உடல் கரையிருப்பு பகுதி மயானத்தில் எரியூட்டப்பட்டது. இறுதி சடங்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உதவி காவல் ஆய்வாளர் முருகனுக்கு தங்களது இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க:குட்கா விவகாரம்: உரிமைக்குழு நோட்டீசுக்கு எதிராக திமுக வழக்கு