ETV Bharat / state

ஒரு கிலோ வேப்ப முத்து 100 ரூபாயா? வனம் சார்ந்த விவசாய பொருட்கள் விற்பனை செய்ய புதிய செயலி...

Tirunelveli Forest Department News: தமிழ்நாட்டில் மரம் மற்றும் மரமல்லா வனப் பொருளுக்கான இ-சேவைக்கான வலைத்தளம் முதல் கட்டமாக நெல்லையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வனப் பொருட்களை விற்பனை செய்யலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

Tirunelveli Forest Dept inagurates app for sale E Plantform for Market Intelligence of Timber
ஒரு கிலோ வேப்ப முத்து 100 ரூபாயா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 7:02 PM IST

Updated : Nov 30, 2023, 7:51 PM IST

ஒரு கிலோ வேப்ப முத்து 100 ரூபாயா? வனம் சார்ந்த விவசாய பொருட்கள் விற்பனை செய்ய புதிய செயலி அ

நெல்லை: தமிழ்நாட்டின் வனப் பரப்புகளை மேம்படுத்துவதற்காக மரம் மற்றும் மரமல்லா வனப் பொருட்களுக்கான உற்பத்தியை அதிகரிக்கவும் அதனை விற்பனை செய்வதற்கான இணையதள இ-சேவை வலைத்தளம் உருவாக்குவதற்கான பங்குதாரர்களின் பயிற்சிப் பட்டறை இன்று (நவ.30) நெல்லையில் நடைபெற்றது. நெல்லை மண்டல வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சிப் பட்டறையில் நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த ஏராளமான விவசாயிகள், மூலிகைச் செடி வளர்ப்போர், சித்த மருத்துவர்கள் மற்றும் மரத்தடி விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 35 சதவீதம் வனப்பகுதிகள் இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது 23 சதவீதம் தான் வனப்பகுதிகள் இருக்கின்றன. வனப்பகுதியில் நிலப்பரப்பை அதிகரிப்பதற்காகத் தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் ஒரு கட்டமாக, வனத்துறை அல்லாத இடங்களில் விவசாயிகள் தடிகளுக்குப் பயன்படுத்தும் மரங்கள், காகிதக் கூழ், தீக்குச்சி உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் மரங்கள், மூலிகை மரங்கள் வளர்ப்பது மற்றும் மூலிகை தாவரங்கள் வளர்ப்பதை அரசு ஊக்குவித்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, தமிழ்நாடு அரசு விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் மரம் மற்றும் மரமல்லா வனப் பொருள்களுக்கான இணைய வழி இ-சேவை வலைத்தளத்தைத் தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் முதல் கட்டமாகத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் வளர்க்கும் மரம் மற்றும் மரமல்லா வனப் பொருட்களை விற்பனை செய்வதற்கான இணைய வழி விற்பனை தளத்தை வனத்துறை கண்காணிப்பில் செயல்படுத்த உள்ளது.

இதில் விவசாயிகள் மூலிகைச் செடி உற்பத்தியாளர்கள், மரத்தடி வியாபாரிகள், சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட உற்பத்தியாளர்களும் அதனைச் சந்தைப்படுத்தும் விற்பனையாளர்களும் இந்த இணையதளத்தில் பங்குதாரர்களாக இணைந்திருப்பார்கள். இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வனப் பொருட்களை எளிதாக விற்பனை செய்வதற்காக வனத்துறை மூலம் இந்த செயலி செயல்படுத்தப்பட உள்ளது.

வனப் பரப்பை அதிகரிக்கும் திட்டம்: இதற்கான பயிற்சிப் பட்டறை நெல்லையில் இன்று (நவ.30) நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையை நெல்லை மண்டல வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் A.S.மாரிமுத்து தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், 'நிலத்தில் 3-ல் ஒரு பகுதி வனப் பரப்பு உள்ளது. வன மரங்கள்தான், காட்டை உற்பத்தி செய்யும் வன மரங்கள். மழைநீரைச் சேமித்து மழை இல்லாத காலத்தில் நீரைக் கொடுக்கும். இந்தியாவில் வனத்துறை தான் முதன்மையான துறை ஆகும். பிரிட்டிஷ் காலத்தில் இத்துறை துவங்கப்பட்டது. தமிழ்நாடு வனப் பரப்பு 21% முதல் 23% உள்ளது. இது 10% குறைவாகும். வனப் பரப்பு 33% இருக்க வேண்டும். எனவே, 10% அதிகரிக்கும் நோக்கில்தான், இத்திட்டம் துவங்கப்பட உள்ளது. வனம் இல்லை என்றால் நாடே இல்லை' என்று கூறினார்.

ஒரு கிலோ வேப்ப முத்து ரூ.100: சமூக வனவியல் மற்றும் விரிவாக்கக் கோட்ட வன அலுவலர் அ.அன்பு திட்ட விளக்க உரையாற்றினார். அவர் பேசும்போது, ஐந்து மாவட்டங்களில் நெல்லை மாவட்டத்தில் தான், முதல் முறையாக இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் பயிர்களை உரிய முறையில் மார்க்கெட்டிங் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். சாதாரணமாக, வேப்ப முத்து ஒரு கிலோ 20 ரூபாய்க்குப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட கள இயக்குநர் மாரிமுத்து, வேப்ப முத்து ஒரு கிலோ 100 ரூபாய் என்றார்.

தொடர்ந்து மரம் மற்றும் மரமல்லா வனப் பொருளுக்கான இ-சேவை வலைத்தளம் உருவாக்குவதற்கான தொழில்நுட்ப கருத்துகளைத் தமிழ்நாடு வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தைச் சார்ந்த பேராசிரியர் வரதராஜன் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், விவசாயிகள் மூலிகை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களது பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி: மதுரை மல்லி கிலோ ரூ.1,200க்கு விற்பனை!

Last Updated : Nov 30, 2023, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.