ETV Bharat / state

அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் - tirunelveli district news

திருநெல்வேலி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களைச் சேர்க்கக் கோரி தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Nov 10, 2020, 7:18 PM IST

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் 7.5 சதவீதம் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கத்தினர் இன்று (நவ.10) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பிரேம்தாஸ் கூறுகையில், "அரசு உதவிபெறும் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளும் ஒரே சட்ட திட்டத்தில்தான் இயங்குகின்றன. அடிப்படையாகவே இரண்டு பள்ளிகளும் அரசின் சட்ட திட்டங்களுக்குள்பட்டுதான் செயல்படுகிறது.

ஆனால் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு தவறுதலாக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கி உள்ளது. எனவே இந்த நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும்.

அதேபோல் ஆசிரியர் பணியில் சேருவோருக்கு வயது உச்ச வரம்பு 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக அனுபவம் கூடகூடதான் ஒரு ஆசிரியர் தன்னை மேலும் மெருகூட்டும் வகையில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள்.

தற்போது அதுபோன்ற வாய்ப்பை அரசு தடைசெய்யும் வகையில் இதுபோன்ற வயது வரம்பை குறைத்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.