ETV Bharat / state

"ஆன்லைன் ரம்மி பிரச்சினையில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது" - நயினார் நாகேந்திரன் - நயினார் நாகேந்திரன்

ஆன்லைன் ரம்மி பிரச்சினையில் தமிழக அரசு தொடர்ந்து இரட்டை வேடம் போடுவதாக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

mla
ராகுல்
author img

By

Published : Mar 26, 2023, 5:14 PM IST

Updated : Mar 26, 2023, 5:52 PM IST

நெல்லை: நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள ராமையம்பட்டியில் இன்று(மார்ச்.26) பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் பட்ஜெட் என்பது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக உள்ளது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது, ஆனால் இப்போது பழைய விதிகளை தகர்த்துவிட்டு தகுதி உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், இவ்வாறு அரசு தெரிவித்துள்ளதால் இத்திட்டம் அனைத்து பெண்களுக்கும் சென்றடைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.

ராகுல்காந்தி தகுதி நீக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது ராகுல் காந்தி அல்ல. அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள் என்பதற்காக அவர் இஷ்டத்திற்கு பேச முடியாது, சட்டம் என்பது அனைவருக்கும் சமம், நீதிமன்ற தீர்ப்பை பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. ராகுல் காந்தி முதிர்ச்சி இல்லாத தலைவராக உள்ளார். பிரதமர் மோடி நான்கு ஆண்டுகளாக ராகுல்காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். நாடாளுமன்றத்திலும் ராகுல்காந்தியின் நடவடிக்கை முதிர்ச்சியற்றதாகவே இருக்கும். வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பாரதப் பிரதமர் ஆவார்" என்றார்.

ஆன்லைன் ரம்மி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆன்லைன் ரம்மி மற்றும் மது போதை உள்ளிட்ட அனைத்தையுமே தமிழக அரசு தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் என்பது தமிழகத்தில் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி தொடர்பாக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றினால், ஆறு மாதத்திற்கு மாநில அரசே நடவடிக்கை எடுக்கலாம் என்றால், தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாமே? தமிழகத்தில் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு எதிர்பார்த்து நிற்பதை விட தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். மத்திய அரசை ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் குறை சொல்வதில் ஒன்றுமில்லை. ஆன்லைன் ரம்மி பிரச்சினையில் தமிழக அரசு தொடர்ந்து இரட்டை வேடம் போட்டுக் கொண்டு இருக்கிறது" என்று கூறினார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 50 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த சூழலில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் இரண்டு முறை திருப்பி அனுப்பினார். இதைத் தொடர்ந்து ஆன்லைன் தடை சட்ட மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை

Last Updated : Mar 26, 2023, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.