ETV Bharat / state

'பேரிடரின்போது முதலமைச்சரின் டெல்லி பயணத்தின் பின்னணி இதுதான்' - அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு - Mk Stalin Delhi visit

K.Annamalai Press Meet: கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் தமிழகத்தில் இருக்காமல், அவர் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கூட்டத்திற்காக டெல்லி சென்றுள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Annamalai Press Meet
நெல்லையில் அண்ணாமலை பேட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 9:12 AM IST

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

திருநெல்வேலி: நெல்லை மாநகாில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பாா்வையிட வந்த பாஜக மாநில தலைவா் அண்ணாமலை நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம், குறுக்குத்துறை, சீ.என்.கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களிடம் நேற்று (டிச.19) வெள்ள பாதிப்புக் குறித்து கேட்டறிந்தாா். அதனைத் தொடர்ந்து, சந்திப்பு ராஜ் மஹாலில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாவட்ட பாஜக சாா்பில் உதவிகளை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அண்ணாமலை, "நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமாி ஆகிய 4 மாவட்டகளில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை தமிழக முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள். தென் தமிழகத்தில் 4 மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு தனது முழு அதிகாரத்தை, செயல்பாட்டை பயன்படுத்தி இருக்கிறது.

தற்போது வரை ஐந்து ஹெலிகாப்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை ஸ்ரீவைகுண்டம் ரயிலில் இருந்து பயணிகளை மீட்கவும், உணவு வழங்கவும் பயன்படுத்தி உள்ளது. 7 என்டிஆர் கடலோர காவல்படை, இரண்டு இந்திய ராணுவம் என மொத்தம் 17 மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய உள்துறை அமைச்சகம் 24 மணி நேரமும் கண்காணிக்கிறது. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் இதற்குத்தான்: ஆனால், மக்கள் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி முதலமைச்சர் எங்கே? முதலமைச்சர் இருக்க வேண்டியது தென் தமிழகத்தில். ஆனால், அவர் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கூட்டத்திற்காக டெல்லி சென்றுள்ளார். ஒரு ஒப்புக்காக பிரதமரிடம் நேரம் கேட்கிறார்கள். ஒரு முதலமைச்சர் கையாளக்கூடிய விஷயம் இது இல்லை. களத்திலிருந்து அதிகாரிகள் அமைச்சர்களை முடுக்கிவிட வேண்டும். மூன்று நாட்களாக மக்கள் பிரதிநிதிகள், கவுன்சிலர், அதிகாரிகள் யாரும் வரவில்லை என இங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

நிவாரணப் பணம் மத்திய அரசுடையது; கவர் மட்டும் திமுகவுடையது: தாமிரபரணி ஆற்றங்கரையோரம் எதிர்பார்க்காத சேதம். வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களையும் இழந்துள்ளனர். ஏழை மக்களின் பத்தாண்டு உழைப்பை 2 நாட்களில் பறி கொடுத்துள்ளனர். மிளா துயரமாக உள்ளது. வெள்ள நிவாரணமாக சென்னையில் ரூ.6000 கொடுத்தார்கள். அது மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.6000 கொடுக்கப்படுகிறது. அதில் 75% மத்திய அரசின் 25% மாநில அரசு. கவர் மட்டும் தான் திமுக, பணம் மத்திய அரசுக்கு சொந்தமானது.

நிவாரணத் தொகை கொடுக்கும் கவரில் அவ்வளவு பெரிய படம் போடுகிறார்கள். ஆனால், மாநில அரசு - மத்திய அரசை கணக்கிடாமல் மறைத்து பேசுகிறார்கள். வீடுகள், கால்நடைகள், விவசாய நிலங்கள் என தனித்தனியே மத்திய அரசின் படி ஒரு கணக்கீடு உண்டு. மாநில அரசு சேத மதிப்பிற்கு அறிக்கை கொடுக்கும். மத்திய அரசு கணக்கீடு அடிப்படையில் கண்டிப்பாக நிவாரணம் கொடுக்கும்.

மூத்தத் தலைவர்கள் இருக்கும்போது களத்தில் உதயநிதி ஸ்டாலின் எதற்கு?: உதயநிதி வர காரணம் என்ன? உதயநிதிக்கு சினிமாவை தவிர வேறு என்ன அனுபவம் உண்டு. இயக்குநரை அழைத்து வந்து நிற்கிறார். அதிகாரமும், அனுபவமும் ஒன்று சேர்ந்து இருக்கவேண்டும் என நாங்கள் கூறுகின்றோம். துரைமுருகன் போன்ற முத்த அமைச்சா்கள் களத்தில் இருந்தால் அவா்களது அனுபவம் நிவாரண உதவிகளுக்கு உறுதுணையாய் இருக்கும்.

ரூ.10 கோடியில் சூப்பர் கம்ப்யூட்டர் வானிலை ஆய்வு மையம்; பலனில்லாமல் போனதா?: கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் சற்று தாமதமாகவே அறிவித்தது என முதலமைச்சா் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் குற்றம் சாட்டி இருந்தாா். அதற்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் சூப்பர் கம்ப்யூட்டர் வானிலை ஆய்வு மையத்திற்கு நீங்கள் தான் கொடுத்தீர்கள். இந்த கம்ப்யூட்டர் எங்கே போச்சு? மேலும் 'ரெட் அலா்ட்' என அறிவிப்பு வந்தது. ஆனால், யாராலும் மழைப்பொழிவை கணக்கிட முடியாது.

தூத்துக்குடி, நெல்லை நான்கு வழிச்சாலை கடந்த 3 தினங்களாக வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. அவசரம் கருதி தொியாமல் காாில் வரும் நபா்களுக்கு தூத்துக்குடி டோல் பிளாசாவில் கட்டணம் கழிகின்றது. நெல்லை செல்ல முடியாமல் மீண்டும் திரும்பி வரும்போதும் கட்டணம் எடுக்கப்படுகின்றது என்ற கேள்விக்கு இதுபற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவண செய்கிறேன். மேலும் நிவரணப் பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு டோல் கட்டணம் இல்லாமல் இலவசமாக செல்ல ஆவண செய்யப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென் தமிழகத்தை தாக்கிய இயற்கை சீற்றம்: இந்திய ராணுவத்தின் முப்படைகள் மேற்கொண்ட மீட்பு பணிகள் என்ன? முழுவிபரம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.