ETV Bharat / state

புவிசார் குறியீடு பெறப்போகும் 90'ஸ் கிட்ஸ் சொப்பு சாமான்கள்! - பழமையும் புதுமையும்

குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் சூழலை அறிமுகப்படுத்துவதில் விளையாட்டுப் பொருள்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. வெறும் பொழுது போக்காக மட்டுமில்லாமல், வண்ணங்களையும், அடிப்படை வடிவங்களையும் விளையாட்டு சாமான்களே குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றன. அவர்களின் ஆரம்பக்கட்ட விளையாட்டில் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றன சொப்பு சாமான்கள் எனப்படும் மரக்கடைசல் பொருள்கள்.

சொப்பு சாமான்கள்
சொப்பு சாமான்கள்
author img

By

Published : Aug 23, 2021, 7:27 PM IST

திருநெல்வேலி : அம்மிக்கல், ஆட்டுரல், தண்ணீர் குடம், டம்ளர், தோசைக்கல், கறிச்சட்டி, உரல் உலக்கை போன்ற சாமான்கள் மரக்கட்டைகளைக் கடைந்து சின்னச் சின்ன வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன அந்த கிராமங்களில்.

அன்றாடம் வீட்டில் புழங்கும் அடுப்படி சாமான்களை கண்ணைக் கவரும் வண்ணம் மரக்கடைசல் பொருள்களாக உருவாக்குவதற்கு தனித்துவம் பெற்றது அம்பாசமுத்திரம். நன்றாக காய்ந்த மரக்கட்டையை இயந்திரத்தின் உதவியுடன் கடைந்து உருவாக்கப்படும் இந்த விளையாட்டுப் பொருள்கள் சொப்பு சாமான்கள் என அழைக்கப்படுகின்றன.

குழந்தைகளை வடிவமைக்கும் சொப்பு சாமான்கள்

குழந்தையின் ஆரம்பக்கால வளர்ச்சியில், அவர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் விளையாட்டு சாமான்களுக்கு பெரும் பங்குண்டு. எண்பது, தொன்னூறுகளைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்ததில் சொப்பு சாமான்களும் முக்கிய அங்கம் வகித்தன.

விரல் சூப்பும் காலத்தில் சூப்புக் கட்டையாய் அறிமுகமாகி, வண்ணமிகு தொட்டில் கம்பாய் கவனம் ஈர்த்து கண்ணுறங்கச் செய்து, தத்தித் தத்தி அடியெடுத்து வைக்கும் போது நடைவண்டியாய் உடன் உருண்டு, அமர்ந்து விளையாடும் போது அடுக்களை பொருட்களாய் மாறி குழந்தைப் பருவம் முழுவதும் அறுபடாத கண்ணியாய் பயணிக்கிறன சொப்பு சாமான்கள்.

வெறும் பொழுது போக்கியாக மட்டும் இல்லாமல், அடிப்படை வண்ணங்களையும், வடிவங்களையும் குழந்தைகளுக்கு சொப்பு சாமான்களே அறிமுகப்படுத்துகின்றன.

சொப்பு சாமான்கள்

நன்றாக காய வைக்கப்பட்ட மரக்கட்டையை எந்திரத்தின் உதவியுன் கடைந்து தேவையான வடிவங்களில் சொப்பு சாமான்கள் உருவாக்கப்படுகின்றன. முன்பு மஞ்சள் கடம்பு, தேக்கு, ஈட்டி மரக்கட்டைகளில் (ரோஸ் உட்) இவை உருவாக்கப்பட்டன. தற்போது மரக்கட்டைகளின் தட்டுப்பாடு, விலையேற்றத்தினால் தைலமரக் (யூகலிப்டஸ்) கட்டைகளே தற்போது பயன்படுத்தப்படுகிறன.

பழமையும் புதுமையும்

அன்றாடம் சமையல் செய்ய தேவையான பொருட்களுடன் காலம் மறந்து விட்ட ஆட்டுரல், திருக்கை கல், உரல் உலக்கை போன்றவைகள் உட்பட 32 வகையான கடைசல் பொருட்கள் அம்பாசமுத்திரத்தில் தயாரிக்கப்படுகின்றன. பழமை மறக்காத சொப்புகள் புதியவைகளை வரவேற்கவும் மறுக்கவில்லை. இன்று கேஸ் சிலிண்டரும், அடுப்பும் சொப்புகளுடன் அணிசேர்ந்துள்ள புதியவைகள்.

இத்தனைச் சிறப்புகள் வாய்ந்த இந்த மரக்கடைசல் தொழில் தற்போது நலிவைச் சந்தித்து வருகிறது. சரியான ஊக்கம் இல்லாததால் இளைஞர்கள் யாரும் இந்தத் தொழிலைச் செய்ய முன் வருவதில்லை என்கிறார் 40 ஆண்டுகளாக மரக்கடைசல் தொழில் செய்து வரும் பாலசுப்பிரமணியன்.

"ஆரம்பத்தில் நல்லமுறையில் தான் தொழில் நடந்து வந்தது. இப்போ கொஞ்சம் கொஞ்சமா இந்த தொழில் நலிவடைஞ்சுட்டு வருது. எங்களுக்கு பிறகு இந்த தொழிலைச் செய்ய யாராவது இருப்பாங்களாங்கிற பயமே வந்துட்டு" என வேதனை தெரிவிக்கிறார் பாலசுப்பிரமணியன்.

அம்பாசமுத்திரத்தில், விளையாட்டு சாமான்கள் மட்டுமே தயாரிக்கப்படுவதில்லை. தொட்டில் கம்பு, கோயிலுக்குத் தேவையான குண்டாந்தடி, உடற்பயிற்சி செய்யத் தேவையான டம்புல்ஸ், கர்லாக்கட்டை, வீட்டுக்குத் தேவையான அலங்காரப்பொருள்களும் மரக்கடைசல்களில் உருவாக்கப்படுகின்றன. மரபுசார்ந்த தொழில்களில் மரக்கடைசலும் ஒன்று. அம்பாசமுத்திரத்தில் பல தலைமுறைகளாக இந்த தொழில் செய்பவர்களும் உண்டு.

"எங்க அப்பா 50 வருஷமா இந்த தொழில் பார்த்தாங்க. அவங்கட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன். பதினஞ்சு வருஷமா கடைசல் தொழில் பார்த்துட்டு வர்றேன். இந்த தொழில்ல சரியான வருமானம் இல்லை; மத்த தொழில் மாதிரி வருமான உயர்வுக்கு அரசாங்கம் உதவி செஞ்சா எங்க தொழிலும் முன்னேறும், நாங்களும் முன்னேறுவோம். அரசாங்கம் மனசு வைக்கணும் என்கிறார் இரண்டாம் தலைமுறையா கடைசல் தொழிலில் ஈடுபட்டு வரும் ரதி.

பாரம்பரியம் மிக்க அம்பை சொப்புகள்

கடந்த 1946ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான காட்டேஜ் இண்டஸ்ட்ரீ ஆப் இந்தியா என்ற புத்தகத்தில், மர விளையாட்டு சாமான்கள் தயாரிக்கப்படும் இடங்களில் அம்பாசமுத்திரம் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. அதே போல, 1947ஆம் ஆண்டு வெளியான ரூரல் ப்ராபளம் ஆப் இந்தியா என்ற புத்தகத்தில் சொப்பு சாமான்கள் தயாரிக்கப்படும் இடங்களாக அம்பாசமுத்திரமும், மதுரை ஐராவதநல்லூரும் இடம் பெற்றுள்ளன. இந்த குறிப்புகள் அம்பாசமுத்திரத்தின் கடைசல் பொருட்களின் நீண்ட பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்றன.

"எங்க காலத்துல, பூம்புகார் மூலமா இந்த தொழில் செய்ய அரசாங்கம் பயிற்சி கொடுத்துச்சு. நானெல்லாம் அந்த பயிற்சி மூலமாக தான் இந்த தொழிலுக்கு வந்தேன். 90கள்ல அதை நிறுத்திட்டாங்க. மறுபடியும் அந்த பயிற்சியை அரசாங்கம் தொடங்கி இளைஞர்கள் இந்த தொழிலுக்கு வர ஊக்கு விக்கணும்" என்கிறார் மரக்கடைசல் தொழிலாளி சரவணன்.

மூலப்பொருள் விலையுயர்வால் நலிவடைந்து வரும் இந்த தொழிலை காப்பாற்ற விசைத்தறி தொழிலாளார்களுக்கு வழங்கப்படுவது போல, இலவச மின்சாரமும், மூலப்பொருள் மானியமும் வழங்கப்பட வேண்டும் என்கின்றனர் கடைசல் தொழில் செய்து வரும் தொழிலாளர்கள்.

"ஜிஎஸ்டி வரி காரணமா வெளிமாநிலங்கள்ல பொருள்களை விக்க முடியால. தமிழ்நாட்டுக்குள்ளதான் நாங்களே கொண்டு போய் வியாபாரம் செய்றோம். ஜிஎஸ்டி வரியில இருந்து விலக்கு பெற அரசாங்கம் உதவணும் எனக் கூறும் சரவணன், அம்பாசமுத்திரம் சொப்பு சாமான்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம் செஞ்சுருக்கு. அங்கீகாரம் கிடைச்சதும் தொழில் வளர்ச்சியடைய வாய்ப்பு இருக்கு" நம்பிக்கை பொங்க கூறுகிறார் சரவணன்

நூற்றாண்டு காலமாய் குழந்தைகளின் விளையாட்டில் அங்கம் வகித்து வரும் சொப்பு சாமான்கள் பொருள்சார் பண்பாட்டின் அடையாளம் என்றால் மிகையில்லை. தனது தனித்துவத்திற்காக புவிசார் குறியீடு பெறப்போகும் 80'ஸ்,90'ஸ் கிட்ஸ்களின் சொப்பு சாமான்கள் அடுத்து வரும் தலைமுறைகளின் விளையாட்டையும் அலங்கரிக்கப் போவது நிதர்சனம்!

இதையும் படிங்க: தனி ஒருத்தி சங்கரி: குப்பை மேட்டை கடல்போல் மாற்றிய சிங்கப் பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.