திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. கரோனா மையங்களில் அவ்வப்போது தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் உடனடியாக வரவழைக்கப்படுகின்றன.
சென்னை முதல் இடம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி தடுப்பூசி மையத்தில் இதுவரை 54 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இது மாநில அளவில் முதலிடம். அதேபோல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி தடுப்பூசி மையத்தில் 50 ஆயிரத்து 230 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
திருநெல்வேலி இரண்டாம் இடம்
இதன் காரணமாக தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்ட பட்டியலில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மாநில அளவில் 2ஆம் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மாநிலங்களின் கையிருப்பில் 1.67 கோடி தடுப்பூசிகள் - சுகாதாரத் துறை