ETV Bharat / state

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி - stalin

திருநெல்வேலி: படுகொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவரின் உடல்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

stalin
author img

By

Published : Jul 24, 2019, 5:14 PM IST

கடந்த 1996-2001ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. இவரும், அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக மூன்று தனிப்படை அமைத்து காவலர்கள், குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

உமா மகேஸ்வரி, முருகசங்கரன் ஆகியோரின் உடல்கள், திருநெல்வேலியில் உள்ள அவர்களது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டுள்ளன. இருவரின் உடலுக்கும் அரசியல் கட்சியினர், உறவினர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், இருவரின் உடலுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நெல்லை மாநகராட்சியில் முதல் பெண் மேயராக பதவியேற்று மக்களுக்கு பல சிறப்பான பணிகளை செய்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு சேவைகளை செய்தவர். கருணாநிதி இருக்கும்போது உமா மகேஸ்வரிக்கு பாவேந்தர் விருது வழங்கி பாரட்டப்பட்டது. நினைத்துப் பார்க்க முடியாத சூழலில் நேற்று மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் தொடர்ந்து இது போன்று கொலை சம்பவங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன. இதற்கு முடிவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

Intro:நெல்லையில் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவரின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Body:

திருநெல்வேலி மாவட்டத்தின் கடந்த 1996 இல் உமா மகேஸ்வரி திமுக சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார். இவர் நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் முருகசங்கரன்(72) நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். இவர்களுக்கு கார்த்திகா, மீரா என இரு மகள்கள் உள்ளனர்.

திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பிரதான சாலையில் உமா மகேஸ்வரி தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் இவர்களை சந்திக்க உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது உமா மகேஸ்வரி(65) அவரது கணவர் முருகசங்கரன்(72) மற்றும் அவர்களது வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது. தகவலறிந்த மேலப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட காவல் ஆணையர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த கொலை சம்பவத்தில் 3 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருக்கலாம் எனவும் ஆதாயத்திற்காக செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலையில் இருந்து உமா மகேஸ்வரி வீட்டில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி உமா மகேஸ்வரியின் உறவினர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியதில் இதுவரை எந்தவிதமான தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. மேலும் அருகில் உள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராவையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் திமுக தலைவர் ஸ்டாலின் நெல்லையில் உள்ள உமா மகேஸ்வரியின் வீட்டில் வைத்திருந்த இருவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

உமாமகேஸ்வரி 1996 இல் நான் சென்னை மேயராக இருந்த போது அவர் நெல்லை மாநகராட்சியில் முதல் பெண் மேயராக பதவியேற்று மக்களுக்கு பல சிறப்பான பணிகளை செய்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு சேவை செய்தவர். கலைஞர் பாராட்டும் வகையில் ஒரு முறை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பாவேந்தர் விருது வழங்கி பாரட்டப் பெற்றவர்
நினைத்து பார்க்க முடியாத சூழலில் நேற்று மூவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இந்த ஆட்சியில் தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நாள்தோறும் நடந்து வருகிறது, இதற்கு முடிவே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது..
படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.