ETV Bharat / state

ஆட்சியாளர்களை மிரட்டி பணம் சம்பாதிக்கும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருநெல்வேலி: ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறிவிடுவேன் எனக் கூறி தங்களின் ஆட்சியாளர்களையே மிரட்டி பணம் சம்பாதிக்கின்றனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

stalin
author img

By

Published : Oct 10, 2019, 1:42 PM IST

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறகிறது. இந்நிலையில் இன்று நாங்குநேரி தொகுதிக்குள்பட்ட பகுதிகளான முன்னீர்பள்ளம், தருவை, செங்குளம் ஆகிய பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "வரும் இடைத்தேர்தலில் வெற்றியைத் தேடி தருவீர்கள் என நம்புகிறேன். தமிழ்நாடே தண்ணீர் இல்லாமல் குடத்தை தூக்கிக்கொண்டு சாலைக்கு வரும் நிலையில் உள்ளது. திமுக ஆட்சியில் குடிநீர், சாலை உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் பிச்னைகளை தீர்க்க முடியவில்லை. மக்கள் குறைகளைக் கேட்டு சரிசெய்ய வேண்டி ஆளுங்கட்சி எட்டு ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

அமைச்சர்களிடம் மேடையில் நேரடியாக நலத்திட்டங்களை பெற முடியாவிட்டால், சம்திங் கொடுத்தால்தான் அந்த உதவிகளைப் பெறமுடியும். குளத்தை தூர்வாருகிறோம் என்ற பெயரில் கொள்ளை நடந்துவருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தினால் அந்தத் தேர்தலை அதிமுக தவிர்க்கிறது. ஆனால் அவர்கள் திமுக வழக்கு தொடர்ந்ததால் தேர்தல் நடத்த முடியவில்லை என சாக்கு போக்கு சொல்லுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிடுவேன், கட்சி மாறி விடுவேன் என மிரட்டி தங்களின் ஆட்சியாளர்களிடம் பணம் பெறுகின்றார்கள்.

விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தியும் பலனில்லை. மக்கள் நல்வாழ்வுத் துறையிலும் ஆயிரக்கணக்காக ஊழல் நடக்கிறது. குட்கா போதைப்பொருள் விற்க அலுவலர்களுக்கு மாமூல் கொடுத்து விற்பனை செய்துவருகிறார்கள். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் மாமூல் கொடுத்த உண்மை வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் உத்தரவிற்கு கூனிக்குறுகி அடிபணியும் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சிக்கு பாடம் புகட்டும் அளவில் இந்த நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவு இருக்க வேண்டும் இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

இறுதியாக காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ராணுவத்தில் பணிபுரிந்தவர். எனவே நாட்டை பாதுகாக்க பணியாற்றியவருக்கு தொகுதி மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Intro:ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆட்சியை மிரட்டி பணம் சம்பாதித்து வருகின்றனர் ராஜினாமா செய்து விடுவேன், கட்சி மாறி விடுவேன் என மிரட்டி பணம் பெறுகின்றார்கள். நெல்லை நாங்குநேரி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.Body:ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆட்சியை மிரட்டி பணம் சம்பாதித்து வருகின்றனர் ராஜினாமா செய்து விடுவேன், கட்சி மாறி விடுவேன் என மிரட்டி பணம் பெறுகின்றார்கள். நெல்லை நாங்குநேரி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.

வருகின்ற 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக-காங்கிரஸ் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுக மற்றும் காங்கிரஸ் நேரடியாக இந்த தொகுதியில் மோதுகிறது. இந்நிலையில் இன்று நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான முன்னீர்பள்ளம், தருவை, செங்குளம் ஆகிய பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டரிந்தும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்தும் வாக்குகள் சேகரித்தார் அப்போது அவர் கூறுகையில்,

வரும் இடைத்தேர்தலில் வெற்றியை தேடி தருவீர்கள் என நம்புகிறேன் உங்களுக்கு எங்கள் மீது அதிகமான நம்பிக்கை இருக்கிறது.

தமிழ் நாடே தண்ணீர் இல்லாமல் குடத்தை தூக்கி கொண்டு சாலைக்கு வரும் நிலையில் உள்ளது. இந்த ஆட்சியில் கமிஷன் அடிச்சாலும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.
தி மு க ஆட்சியில் குடிநீர், சாலை உள்ளிட்ட பல மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மக்கள் பிச்சனைகளை தீர்க்க முடியவில்லை. மத்திய அரசின் அடிமை ஆட்சி இங்கு நடைபெற்று வருகிறது
மக்கள் குறைகளை கேட்டு சரி செய்ய வேண்டியது ஆளும் கட்சிதான் அவர்கள் 8 ஆண்டுகளாக செயல்படவில்லை.

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ராணுவத்தில் பணிபுரிந்தவர். நாட்டை பாதுகாக்க பணியாற்றியவருக்கு தொகுதி மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பு அளிக்க வேண்டும்.

நேரடியாக அமைச்சர்களிடம் மேடையில் நலத்திட்டங்களை பெற முடியாவிட்டால் சம்திங் கொடுத்தால் தான் அந்த உதவிகளை பெற முடியும். குளத்தை தூர் வாருகிறோம் என்ற பெயரில் கொள்ளை நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தோல்வி என்ற காரணத்தினால் தேர்தலை நடத்த அதிமுக தயாராக இல்லை. திமுக வழக்கு போட்டதால் நடத்த முடியவில்லை என சாக்கு போக்கு சொல்லி வருகின்றனர்.
தி மு க ஆட்சிக்கு வந்தவுடன் உடனே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆட்சியை மிரட்டி பணம் சம்பாதித்து வருகின்றனர் ராஜினாமா செய்து விடுவேன், கட்சி மாறி விடுவேன் என மிரட்டி பணம் பெறுகின்றார்கள் என்றும்

விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தியும் பலனில்லை
மக்கள் நல்வாழ்வு துறையிலும் ஊழல் ஆயிரக்கணக்காக நடக்கிறது. மக்கள் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நடவடிக்கை இல்லை. குட்கா போதை பொருள் விற்க அதிகாரிகளுக்கு மாமுல் கொடுத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் மாமூல் கொடுத்த உண்மை வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் உத்தரவிற்கு கூனி குறுகி அடிபணியும் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சிக்கு பாடம் புகட்டும் அளவில் இந்த நாங்குனேரி இடைத்தேர்தல் முடிவு இருக்க வேண்டும் இருக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.