ETV Bharat / state

கிறிஸ்துமஸ் பண்டிகை: திருநெல்வேலி புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை! - Xaviers church christmas celebration

Christmas Celebration: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு நெல்லையில் உள்ள புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை வெகு விமர்சையாக நடைபெற்றது.

புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 12:41 PM IST

கிறிஸ்துமஸ் பண்டிகை

திருநெல்வேலி: இயேசு கிறிஸ்து பிறந்த நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் மற்றும் கதீட்ரல் பேராலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இன்று (டிச.25) கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு ஜெபவழிபாடு, கூட்டுப் பிரார்த்தனை ஆகியவை நடைபெற்று வருகிறது. இந்நாளில் கிறிஸ்துவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இயேசுவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் உலங்கெங்கும் உள்ள மக்களால், இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கிறிஸ்துமஸ் தின விழாவாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்து குழந்தையாக பிறந்ததை வெளிப்படுத்தும் விதமாக குழந்தை இயேசு சொரூபத்தை எடுத்துக்காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மாநகர் பகுதிகளில் சாலைகள், வீதிகள் மற்றும் தேவாலயங்கள் முழுவதுமாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் மறைமாவட்ட கத்தோலிக்க பேராயர் அந்தோணிசாமி கலந்து கொண்டு திருப்பலி நடத்தி நற்செய்தி வழங்கினார்.

கிறிஸ்துவ பண்டிகை குறித்து, பாளையங்கோட்டை மறைமாவட்ட கத்தோலிக்க பேராயர் அந்தோணிசாமி கூறுகையில், “கிறிஸ்து பிறப்பு பெருவிழா பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இயேசு கிறிஸ்து மனித உருவெடுத்து நம்மில் ஒருவராக பிறந்திருக்கிறார். கடவுள் மனிதனை தேடி வருகிறார். இயேசு பிறந்தவுடன் வசதி படைத்தவர்களையும, தலைவர்களையும் காணவில்லை. பிறந்த தருணத்தில் இடையர்களை தான் பார்த்துள்ளார். இன்றும் இயேசு பகவாம் நமக்கு அமைதி மற்றும் நிம்மதியை கொடுப்பவராக இருக்கின்றார்” என்று கூறினார்.

இதேபோல், கதீட்ரல் பேராலயத்தில் அதிகாலை 3 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் புத்தாடை அணிந்து தங்களது குடும்பத்துடன் வருகை புரிந்து, சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் சொல்லி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், இதுபோன்று மாவட்டத்தில் வள்ளியூர், அம்பாசமுத்திரம், களக்காடு, சேரன்மகாதேவி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது.

பேராலயத்தின் நுழைவு வாயிலில் இஸ்ரேல், பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தன.

இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..ஏராளமானோர் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.