சசிகலாவின் 64ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தச்சநல்லூரில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பால் கண்ணன் தலைமையில், ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பு பூஜை நடத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா விரைவில் விடுதலை பெற வேண்டி இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றதாக அமைப்பு செயலாளர் பால் கண்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரம் உயர சட்டப்பேரவை தேர்தலில் சசிகாலா தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:முறப்பநாடு அருகே பயங்கரம்: நாட்டு வெடிகுண்டு வீசியதில் தனிப்படை காவலர் உயிரிழப்பு!