ETV Bharat / state

'கருணாநிதியின் கனவு திட்டம்... திமுக வளைந்து கொடுக்காது'

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்புத் திட்டம் கருணாநிதியின் கனவுத் திட்டம். இதில் யாருடைய ஆதாயத்துக்காகவும் திமுக வளைந்து கொடுக்காது என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் கனவு திட்டம்
கருணாநிதியின் கனவு திட்டம்
author img

By

Published : Aug 6, 2021, 8:34 AM IST

திருநெல்வேலி: மழை வெள்ள காலத்தில் தாமிரபரணி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை ராதாபுரம், சாத்தான்குளம் உள்ளிட்ட வறட்சியான பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் வகையில் 2007-2008ஆம் ஆண்டு நதிநீர் இணைப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்தத் திட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாய் ஆகிய நதிகளை இணைக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக 369 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதற்கட்டமாக 214 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இதில் இரண்டு கட்ட பணிகள் முழுமையாக முடிந்துள்ள நிலையில் நெல்லை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் 17.09 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டும் பணியினை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று (ஆக. 5) தொடங்கிவைத்தார்.

பாலம் கட்டும்பணியினை தொடங்கி வைத்த சபாநாயகர்
பாலம் கட்டும் பணியினைத் தொடங்கிவைத்த சபாநாயகர்

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ”கருணாநிதியின் கனவுத்திட்டமான தாமிரபரணியாறு, நம்பியாறு, கருமேனியாறு இணைப்புத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நெல்லை-கன்னியாகுமரி சாலையில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ரயில்வே பாலம் ஒன்றும் கட்டப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.

நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் கடலில் வீணாக கலக்கும் தண்ணீர் வெள்ளநீர் கால்வாய் வழியாக ராதாபுரம், சாத்தான்குளம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்படும். இதன்மூலம் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பயன்பெறும்.

சபாநாயகர் அப்பாவு

முன்னாள் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை இத்திட்டத்தைக் கிடப்பில் போட திமுக அரசு முயற்சிப்பதாகக் கூறினார். குறிப்பாக என்னைக் குறிப்பிட்டு சில ஆதாயத்துக்காகத் திட்டத்தை மாற்றி அமைப்பதாகக் கூறியிருந்தார்.

2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆணை பிறப்பித்தபோது எந்தெந்த சர்வே வழியாகக் கால்வாய் செல்ல வேண்டும் என அனுமதி பிறப்பிக்கப்பட்டதோ அதே போன்று தான் கால்வாய் அமைக்கப்படுகிறது. எந்த மாற்றமும் கிடையாது.

கடந்த 10 ஆண்டுகளில் அவர்களால் பணியைச் செய்து தர முடியவில்லை. எனவே இதை வேகமாகச் செயல்படத்தக் கூடாது என்ற வருத்தத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

ஏதேனும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் மத்தியில் கால்வாய் வருவதாகக் கூறினால் அதை ஆராய்ந்து அலுவலர்கள் திட்டத்துக்கு சரியாக வந்தால்தான் மாற்றி கொடுப்பார்களே தவிர வேறு யாரின் ஆதாயத்துக்காகவும் இந்த அரசு வளைந்து கொடுக்காது.

இது கருணாநிதியின் கனவுத் திட்டம் இந்தியாவில் முதன்முதலாக நதிநீர் இணைப்புத் திட்டம் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதை அதிமுக ஆட்சி 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது. எனவே இந்தத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்” என்றார்.

இதையும் படிங்க: திமுக அரசுக்கு மக்களே அரண் - அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.