திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் செல்வகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த தம்பதியிடம் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது அந்த தம்பதியின் மகனை காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் தேவையில்லாமல் மிரட்டியதாகவும், அதை தட்டிக் கேட்டபோது தம்பதியை காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
அதன்படி செல்வகுமார் தற்போது மானூர் காவல் நிலையத்தில் இருந்து வள்ளியூர் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உதவி ஆய்வாளர் மீது புகார் எழுந்த சில மணி நேரத்தில் அவரை இடமாற்றம் செய்த காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொது இடத்தில் ஆபாச சொற்கள்: காவலரின் காணொலி வைரல்