ETV Bharat / state

மது அருந்த பணம் கேட்டு டார்ச்சர்... மகனை அடித்துக் கொன்ற தாய்! - murder at Tirunelveli

மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி வீட்டில் தொந்தரவு செய்து வந்த இளைஞரை குடும்பத்தினரே அடித்து கொலை செய்து, இறுதி சடங்கு செய்யும் பணியில் ஈடுபட்ட சம்பவம் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி டார்ச்சர் செய்த மகன் அடித்து கொலை; தாய் மற்றும் சகோதரி கைது!

author img

By

Published : Aug 21, 2023, 12:06 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்த மகனை, தாயும், சகோதரியும் அடித்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை அடுத்த எம்.கே.பி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் பெயிண்டிங் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் செல்லத்துரை அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு அவரது தாய் மற்றும் சகோதரிகளிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செல்லத்துரை நேற்று இரவு (ஆகஸ்ட். 20) மது அருந்திவிட்டு போதையில் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அவரை வீட்டில் இருந்த தாயும் சகோதரியும் அடித்து உதைத்து உள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதுபோதையில் இருந்த செல்லதுரையை கண்டித்து அமைதியாக இருக்குமாறு அறிவுரை வழங்கி சென்று உள்ளனர். மீண்டும் காலையில் குடிக்க பணம் கேட்டு செல்லதுரை வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மீண்டும் செல்ல துரையை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் செல்லத்துரை மயக்கம் அடைந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். வெகுநேரமாகியும் செல்லத்துரை எழுந்திருக்காத நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் சகோதரி போலீசாருக்கு பயந்து, செல்லதுரை வலிப்பு வந்து உயிரிழந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மாமூல் கேட்டு மிரட்டி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கு - தனியார் மாத இதழ் ஆசிரியர் கைது!

பின்னர் அவருக்கு இறுதி சடங்கு செய்வதற்காக அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான பணியில் தாயும் சகோதரியும் ஈடுபட்டு உள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்லதுரையின் கழுத்து இருக்கப்பட்டு உயிரிழந்திருப்பதை கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து தாய் மற்றும் சகோதரியிடன் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணயில் இருவரும் முன்னுக்கு பின்னான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் தாய் மரிய வயலட் மற்றும் அவரது மகளான சிறுமி இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து உள்ளனர்.

விசாரணையில் தொடர்ந்து மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் செல்லத்துரையை அடித்து கொலை செய்ததாக போலீசாரிடம் இருவரும் தெரிவித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த செல்ல துரையின் உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த மகனை, தாய் மற்றும் சகோதரி அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வேலூரில் குழந்தை கடத்தல்; 8 மணிநேரத்தில் கூண்டோடு கைது செய்த போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.