ETV Bharat / state

உளவுத்துறையை நடுங்க வைத்த சீவலப்பேரி கொலை.. போராட்டம் முடிவுக்கு வந்ததன் பின்னணி என்ன?

சீவலப்பேரி கொலை வழக்கில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் சபாநாயகரின் கோரிக்கையை முடிவுக்கு வந்தது.

உளவுத்துறையை நடுங்க வைத்த சீவலப்பேரி கொலை

author img

By

Published : Nov 16, 2022, 6:10 PM IST

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள சுடலை கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக இரு சமூகத்திற்கு இடையே தொடர்ந்து பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி கோயில் பூசாரி சிதம்பரம் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக பூசாரி சிதம்பரத்தின் நெருங்கிய உறவினரான மாயாண்டி கடந்த பத்தாம் தேதி அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி படுகொகொலை செய்யப்பட்டார்.

போராடுவோம்... உடலை வாங்க மாட்டோம்

இதனால் நெல்லையில் சமுதாய ரீதியாக பெரும் பதட்டம் ஏற்பட்டது. மாயாண்டி கொலை வழக்கில் 13 பேரை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட இருவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கடந்த ஐந்து நாட்களாக போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக சமுதாய அமைப்பும் களத்தில் இறங்கியது. எந்த நேரமும் போராடலாம் என்பதால் காவல் அதிகாரிகள் இந்த ஐந்து நாட்களும் பதற்றமான மனநிலையில் இருந்தனர்.

குறிப்பாக நேற்று முந்தினம்(நவ.14) 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் பேருந்து உடைப்பு என அதிரடி காட்டியதால் காவல்துறை அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நேற்று(நவ.16) 5000 பேரை திரட்டப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதை எடுத்து விசாரணை மாநகர காவல் ஆணையர் அவினாஷ் குமார் சீவலப்பேரி கொலை விவகாரத்தில் யாரும் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வர வேண்டாம் மீறி வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை ஒன்றை அவசர அவசரமாக வெளியிட்டார்.

இந்த பதற்றமான சூழலுக்கு இடையே இன்றும் வழக்கம் போல் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி காவல்துறை குவிக்கப்பட்டனர். கண்ணீர் புகை குண்டு வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஒருவர் கூட ஆட்சியர் அலுவலகம் வரவில்லை மாறாக பாளையங்கோட்டையில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலை முன்பு 100-க்கும் மேற்பட்டோர் கூடினர்.

சபாநாயகரின் அவசர வருகை

இதையடுத்து காவல்துறை அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும் பிரச்சனையை நிரந்தரமாக எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் ஆட்சியர் மற்றும் மாநகர காவல் உயர் அதிகாரிகள் கடும் குழப்பத்தில் இருந்தனர். ஜாதி ரீதியான பிரச்சினை என்பதால் சென்னையில் உள்ள உளவுத்துறை உயரதிகாரிகளும் நெல்லை விவகாரத்தால் டென்ஷனாக இருந்துள்ளனர். இக்கள நிலவரம் குறித்து உளவுத்துறை அவ்வப்போது தகவல் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் உளவுத்துறை அதிகாரிகள் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர நெல்லையை சேர்ந்த சபாநாயகரின் உதவியை அதிரடியாக நாடினர். சபாநாயகர் அப்பாவுவை தொடர்பு கொண்ட உளவுத்துறை அதிகாரிகள் தாங்கள் தான் எப்படியாவது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் சட்டம் ஒழுங்கில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மூலம் சபாநாயகரை தொடர்பு கொள்ள ஏற்பாடு நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அவசர அவசரமாக நிகழ்ச்சி முடித்துக் கொண்டு நெல்லை திரும்பினார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து உயிரிழந்த மாயாண்டி குடும்பத்தினர் மற்றும் சமுதாய அமைப்பினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஏற்கனவே கூறியபடி, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட பூசாரி சிதம்பரம் மற்றும் மாயாண்டி ஆகிய இருவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தங்கள் சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

நெல்லையில் அமைதி

உளவுத்துறையை நடுங்க வைத்த சீவலப்பேரி கொலை

அதற்கு பாதிக்கப்பட்ட இருவரது குடும்பத்திற்கும் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்தார். மேலும் சீவலப்பேரியில் மேற்கொண்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சபாநாயகரின் இந்த உறுதியை ஏற்று, நேற்று உடலை வாங்க உறவினர்கள் சம்மதித்தனர். இதனால் ஐந்து நாட்களாக நீடித்த நெல்லை போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து இன்று(நவ.16) நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த மாயாண்டியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக சீவலப்பேரி எடுத்து செல்லபட்டு, அமைதியான முறையில் இறுதி ஊர்வலம் நடைப்பெற்றது. இதன் மூலம் நெல்லையில் பதட்டம் ஏற்படுத்திய கொலை வழக்கில் ஐந்து நாட்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதையும் படிங்க: முன்னாள் நகர செயலாளர் கொலை: பழி தீர்க்க திட்டம்!. 5 பேர் கைது..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.